சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் உச்சத்தில் இருந்த போதும் ஒருவருக்கு ஒருவர் பொறாமைப்படாத நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர்.
இது பலபேருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஒரே தொழிலில் உச்சத்தில் இருக்கும் இருவர் சண்டை போடாமல் இருப்பது இதுதான் முதல் முறை எனவும் கூறுகின்றனர். அப்படி நட்புக்கு இலக்கணமாக வலம் வந்தவர்கள்தான் கமல் மற்றும் ரஜினி.
அந்த நட்பின் காரணமாகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்ததும் தெரிந்ததே. ஆனால் கடைசி நேரத்தில் ரஜினி அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.
முதலில் கமல்ஹாசன் சொந்த தயாரிப்பு என்று சொல்லிவிட்டு தனக்கு தெரிந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்கி அந்த படத்தை எடுக்கப்போவதாக ரஜினிக்கு அரசல் புரசலாக தகவல்கள் வந்துள்ளது.
அதுவும் ஒரே ஒரு கம்பெனி என்றால் பரவாயில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட சில கம்பெனிகளில் பணம் வாங்கி ரஜினி படத்தை தயாரிக்க கமலஹாசன் ஐடியா போட்டிருந்தார். ஆனால் இது பின்னாளில் நமக்கு சிக்கலை கொடுத்துவிட்டால் என்ன செய்வது என யோசித்துள்ளார் ரஜினி.
பிறகு கமல்ஹாசனை கூப்பிட்டு நாம் எப்போதும் போல் நல்ல நண்பர்களாக இருந்து விடுவோம், சினிமா வியாபாரம் என்று வந்துவிட்டால் அதில் ஏதேனும் மனக்கசப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறிவிட்டாராம். அதன் விளைவு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் அதே படத்தில் கமல் நடிப்பில் விக்ரம் என்ற பெயரில் இந்தப் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.