வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுப்ரமணியபுரம் படத்தில் சுவாதியை கொல்லாதது ஏன்? சர்ச்சை புகைப்படத்திற்கு சசிகுமார் தந்த விளக்கம்

சசிகுமாரை நடிகராக அனைவரும் கொண்டாடினாலும் இயக்குனராக கொண்டாட துடிக்கவே பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு தரமான படங்களை கொடுத்தார்.

அதிலும் 2008 ஆம் ஆண்டு ஜெய் மற்றும் சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் வேற லெவல் வெற்றி பெற்றது. காதல், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றுடன் சேர்ந்து பக்கா கேங்ஸ்டர் படமாக அமைந்தது பட்டையை கிளப்பியது.

இந்த படத்தை தற்போது திரையரங்குகளில் வெளியிட்டாலும் இந்த படத்தை பார்க்க பெரும் கூட்டம் திரண்டு வரும். மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் முதல் பின்னணி இசை வரை ஜேம்ஸ் வசந்தன் அறிமுக இசையமைப்பாளராக பின்னி பெடலெடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து படத்தில் ஆங்காங்கே வரும் பழைய பாடல்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதிலும் தோட்டம் கொண்ட ராசாவே என்ற பாடல் எல்லாம் வேற லெவல் வெறி ஏற்றியது.

இப்படி காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்த சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் கடைசியாக ஜெய்யின் சாவுக்கு காரணமாக இருந்த சுவாதியை சசிகுமார் என்ன செய்தார் என்பது பற்றி எந்த ஒரு முடிவும் இல்லை. ஆனால் ட்ரெய்லரில் சுவாதி பக்கத்தில் சசிகுமார் கத்தியை வைத்து அமர்ந்தது போல் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.

இது குறித்து இணையத்தில் சந்தேகம் கிளம்ப, உடனடியாக சசிகுமார் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், அது ட்ரெய்லருக்காக எடுத்த போட்டோ ஷூட் மட்டும்தான் என்று கூறி அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

subramaniyapuram-cinemapettai
subramaniyapuram-cinemapettai

Trending News