2010ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சுறா படத்துடன் விஜய்யின் சினிமா கேரியர் காலி என எழுதிய பத்திரிகைகள் எத்தனை உண்டு தெரியுமா. ஏன் விஜய் ரசிகர்களே அந்த நேரத்தில் நம்பிக்கை இழந்திருந்தனர் என்பதுதான் உண்மை.
ஆனால் அதன் பிறகு விஜய்யின் விஸ்வரூபம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன. துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர் என தொட்டதெல்லாம் வெற்றி. அதுவும் மாபெரும் வசூல் செய்த மறக்க முடியாத வெற்றிப் படங்களாக அமைந்தது.
இதன் காரணமாக விஜய்யின் அண்டை மாநில மார்க்கெட் நிலவரங்களும் தற்போது உச்சத்தை தொட்டு கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் விஜய்யின் படம் குறைந்தது 20 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்கிற நிலைமை உருவாகியுள்ளது.
விஜய்யின் குறிப்பிட்ட சில வருடங்களில் இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி சாத்தியம் என்பதற்கு ஆணிவேராக இருப்பது அவரது மேனேஜர் ஜெகதீஷ் என்பவர் தான். மேலும் விஜய்யின் அடுத்த பட சம்பளம் 120 கோடி வாங்கும் அளவுக்கு வழிவகை செய்ததும் ஜெகதீஷ்தானாம்.
ஜெகதீஷ் தான் தமிழ்நாட்டில் விஜய்யின் மார்க்கெட் ஓரளவுக்கு நிலையான இடத்தை பிடித்த பிறகு மற்ற மாநிலங்களில் விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்த போராடினாராம். விஜய்யின் படம் ஒவ்வொன்றும் வெளியாகும் போது சரியான பட விநியோகஸ்தகரை பிடித்து பெரிய அளவில் விளம்பரம் செய்து மற்ற மொழி நடிகர்களுக்கு சவால் விடும் அளவுக்கு விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.
தெலுங்கில் சுத்தமாக மார்க்கெட்டில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த விஜய்க்கு கடந்த சில வருடங்களில் மட்டும் தொடர்ச்சியாக 20 கோடிக்கும் மேல் அவரது படங்கள் வசூல் செய்து வருகின்றன. சூப்பரான படங்களாக இருந்தாலும் பரவாயில்லை விஜய்யின் சுமாரான படங்களே இவ்வளவு வசூல் செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் காரணமாகத்தான் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் தளபதி 66 படத்திற்கு தமிழ் மொழிக்கு 80 கோடி, தெலுங்கு மொழிக்கு 40 கோடி என விஜய்க்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது.