புரட்சி கலைஞர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த நடிகர்களில் ஒருவர். அன்றைய தேதியில் முன்னணியில் இருந்த அனைத்து நடிகர்களின் மார்க்கெட்டையும் அசைத்துப் பார்த்தவர்.
அதுமட்டுமில்லாமல் போலீஸ் கதாபாத்திரம் என்றால் இயக்குனர்கள் முதல் ஆளாக தேர்ந்தெடுக்கும் நடிகர் விஜயகாந்த் தான். வாழ்நாளில் அளவுக்கதிகமான போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் விஜயகாந்த் தான்.
அப்படிப்பட்ட விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மோசமான தோல்வியை தழுவிய திரைப்படம்தான் தர்மபுரி. ஒரே சமயத்தில் நடிப்பு மற்றும் அரசியல் ஆகிய இரண்டையும் படத்துக்குள் கொண்டு வந்ததால் ஏற்பட்ட விளைவு.
ஆனால் இதற்கு அது மட்டும் காரணமல்ல. மட்டமான திரைக்கதையும் கூட தான். விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பேரரசு விஜயகாந்த் உடன் இணைந்த முதல் படம் தான் தர்மபுரி.

ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தர்மபுரி திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு என்ன காரணம் என்பதைக் கூட பேரரசு சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து படம் செய்ய ஆசைப்பட்டு கேப்டன் விஜயகாந்துக்கு இப்படி ஒரு தோல்வி படத்தை கொடுத்துவிட்டேன் என சமீபத்தில் புலம்பித் தள்ளியுள்ளார் பேரரசு.