தமிழ் சினிமா ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் மோகன். அப்போதெல்லாம் மோகன் திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்தால் ரஜினி, கமல் படங்கள் வெளிவருவது அதிசயம். அந்த அளவிற்கு அன்றைய காலத்தில் பல நடிகர்களுக்கு போட்டியாக இருந்துள்ளார் மோகன்.
இவரது நடிப்பில் வெளியான பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் போன்ற படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே அன்றைய காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தன.
இவரின் வெற்றிக்கு இணையாக ஒரு நடிகர் வேண்டும் என்பதற்காகவே கமலஹாசன் உருவாக்கப்பட்டதாக அன்றைய காலத்தில் பலரும் கூறினர். அதற்கு காரணம் நடிப்பின் மூலம் கமலஹாசனும் அவருக்கு இணையாக சினிமாவில் சாதித்து வந்தார்.
அப்போதெல்லாம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்களில் சேர்ந்து நடிக்க மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அதனை மறுத்து விட்டார் மோகன்.
மோகன் படங்களில் அவருக்கு தமிழ் சரிவர பேச வராததால் மற்ற கலைஞர்களை வைத்து தான் குரல் டப்பிங் செய்து வந்தனர். ஒரு கட்டத்திற்கு பிறகு மோகன் நானே நேரடியாக படங்கள் பேசுகிறேன் என கூறினார், ஆனால் இவரது குரலில் வெளியான படங்கள் தோல்வியடைந்தன.
அதுமட்டுமில்லாமல் அவருக்கு டப்பிங் பேசியவர்களை ஒரு கட்டத்துக்குப் பிறகு சண்டை போட்டுக் கொண்டதால். அதன்பிறகு மோகனுக்கும் சரிவர டப்பிங் செய்ய கலைஞர்கள் கிடைக்காமல் தமிழ் சினிமாவில் அப்போது தடுமாறி உள்ளார். இதுவே சினிமாவில் மோகன் தோல்விக்கு காரணமாக அமைந்தது.