செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மங்காத்தா 2வை பற்றி பேசினாலே எரிச்சலடையும் அஜித்.. ஓட்ட வாய் நாராயணனால் வந்த வினை

அஜித்தின் ஏகன், அசல் போன்ற படங்கள் படு தோல்வி சந்தித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படம் தான் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதுவரை அஜித்தை அவருடைய ரசிகர்கள் நேர்மையான கதாநாயகனாக பார்த்த நிலையில், மங்காத்தா படத்தில் வில்லனாக பார்த்து வித்தியாசமான அனுபவத்தை பெற்றனர்.

இதனால் மங்காத்தா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அப்போதிலிருந்தே இப்போது வரை அதிகமாக இருக்கிறது, ஆனால் மங்காத்தா 2வை பற்றி பேசினாலே அஜித் எரிச்சலடைகிறார். எல்லாத்திற்கும் காரணம் ஓட்ட வாய் வெங்கட் பிரபு தான் காரணம். ஆனால் மங்காத்தா அஜித்துக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் கொடுத்த படம் என்று சொல்லலாம்.

Also Read: அஜித்தில் ஆரம்பித்து, விஜய் படத்தில் கிடைத்த பெரிய சக்சஸ்.. தன் அப்பாவை மனதில் வைத்து எடுத்த இயக்குனர்

அதன் பின் ரசிகர்கள் மங்காத்தா 2வை பெரிதும் எதிர்பார்த்தனர். 2011 இல் வெளிவந்தது மங்காத்தா, கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகியும் இரண்டாம் பாகம் கனவாக இருக்கிறது.  இதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தான். மங்காத்தா படத்திற்கு பிறகு நான் அஜித், விஜய் சேர்ந்து வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இவர் இந்த மாதிரி பேசிக் கொண்டு இருந்தது அஜித்துக்கு பிடிக்கவில்லை. இதற்கு அஜித் ஒத்துக் கொள்ளாத போதே வெங்கட் பிரபு இவ்வளவு ஆட்டம் போடுகிறார் என்றால், அவர் ஒத்துக் கொண்டால் எந்த அளவிற்கு ஆடுவார் என்று மங்காத்தா 2 படத்தை பற்றி பேசும்போதெல்லாம் அஜித் அதை தட்டி கழித்து விடுகிறார்.

Also Read: இன்று வரை சர்ச்சையில் சிக்காத நடிகை.. அஜித்துடன் ஜோடி சேர்ந்து ஹிட் கொடுத்த ஹீரோயின்

எப்போது வெங்கட் பிரபுவிற்கு விஜய்யை தன்னுடன் சேர்த்து வைத்து படம் பண்ண வேண்டிய ஆசை வந்துச்சோ! அப்போதே மங்காத்தா 2-வை கைவிட்டு விட்டார். எல்லாத்துக்கும் வெங்கட் பிரபு வாய்தான் காரணம். இப்போது அஜித் நினைத்தால் ஒழிய மங்காத்தா 2 படத்திற்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும்.

ஆனால் வெங்கட் பிரபுவின் 14 வருடத்திற்கு கிடைத்த தவமாக விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுத்தால் அஜித் அடுத்து மங்காத்தா 2 படத்தை இயக்குவதற்கு மனம் இறங்கி ஒத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதில் எது நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Also Read: பிரம்மாண்டமா ஒரு படம் பண்ணியாச்சு, கமர்ஷியலா ஒரு ஹிட் கொடுக்கலாம் வெங்கட்.. கட்டளையிட்ட விஜய்

Trending News