ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாவனிக்கு முத்தம் கொடுத்ததன் காரணம் இதுதான்.. வெளிப்படையாக போட்டுடைத்த அமீர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 வில் அதிகம் கிசுகிசு பேசப்பட்ட நபர் என்றால் அது அமீர், பாவனி தான். ஆரம்பத்தில் அபிநய் பாவனிடம் நெருங்கி பழகுவதாக சந்தேகப்பட்டா ராஜு எல்லோரும் முன்னிலையில் பாவனியை நீங்கள் காதலிக்கிறீர்களா என்று ஒரு டாஸ்கில் கேள்விகேட்டார்.

அபிநய் அதை மறுத்து நாங்கள் இருவரும் நட்பாக தான் பழகி வருகிறோம் என கூறியிருந்தார். அதன்பிறகு வைல்ட் காட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவர் அமீர். கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகக் கொடூரமான நிகழ்வை உருக்கமாக சொல்லியிருந்தார் அமீர். இதனால் இவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு அளித்து வந்தார்கள்.

இந்நிலையில் அமீர் பாவனிடம் நெருங்கி பழகுவதும், அவருக்கு முத்தம் கொடுத்ததும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் அவர் மீது கோபமாக இருந்தனர். பிக் பாஸ் பைனல் முடிந்தவுடன் தற்போது பல்வேறு சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் அமீர். அப்போது பாவனிக்கு முத்தம் கொடுத்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமீர், மற்ற போட்டியாளர்கள் பாவனியை டார்கெட் செய்தது பாவமாக இருந்தது, இதனால் அவரிடம் பேச ஆரம்பித்து நட்பாக பழகி வந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் பாவனியை காதலிப்பதாக நேரடியாக கூறினேன். ஆனால் அவர் நட்பாகத்தான் பழகி வருவதாக கூறினார். அது அவருடைய விருப்பம் அதற்கு நான் சம்மதித்தேன்.

ஆனால் அப்போது இருக்கும் மனநிலையில் என் காதல் உணர்வில் நான் பாவனிக்கு முத்தம் கொடுத்தேன். ஆனால் நான் வலுக்கட்டாயமாக கொடுக்கவில்லை. பாவனியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெளியில் இது இவ்வளவு பெரிய பூதாகரமாக வெடிக்கும் என்பது எனக்கு தெரியவில்லை என அமீர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போதும் பாவனியுடன் நட்பாக பழகி வருகிறேன் என கூறியுள்ளார்.

Trending News