பழம் பெரும் நடிகர் நாகேஷ் மற்றும் ஆச்சி மனோரமா இருவரும் தங்களுடைய நகைச்சுவையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள். தில்லானா மோகனாம்பாள், அன்பே வா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இன்று வடிவேலு, கோவை சரளா ஜோடி எப்படியோ அப்படித்தான் அன்று நாகேஷ், மனோரமா ஜோடி மக்களிடையே பிரபலமாக இருந்தது. ஆனால் 1968 க்கு பிறகு சில காரணங்களால் இந்த ஜோடி திரையில் நடிக்காமல் பிரிந்தனர்.
இதற்கு ஒரு வலுவான காரணமும் இருந்தது. நடிகர் நாகேஷின் மனைவி ரெஜினாவின் சகோதரர் செல்வராஜ். அவர் ஒருநாள் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு காரணமாக ரெஜினா மற்றும் அவரது பெற்றோர்களை காவல்துறை கைது செய்தது.
செல்வராஜ் ஏற்கனவே குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் அதனால் பணம் கேட்டு அடிக்கடி தங்களை துன்புறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் நாங்கள் அடிக்க வில்லை என்றும் கோர்ட்டில் கூறினார். இந்த வழக்கிற்கு மனோரமாவும் ஒரு சாட்சியாக இருந்தார்.
பின்னர் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் செல்வராஜ் அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்தது உறுதியானது. அதனால் அவருடைய மரணத்திற்கு ரெஜினாவும் அவரது பெற்றோர்களும் காரணமில்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மன அழுத்தம் காரணமாக சிறிது நாட்களிலேயே நாகேஷின் மனைவி ரெஜினா மரணமடைந்தார்.
இந்தக் காரணத்தாலும், மனோரமா தங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வில்லை என்ற காரணத்தாலும் நாகேஷ் பின்னாளில் மனோரமா உடன் இணைந்து நடிப்பதை நிறுத்தி விட்டார். அதன் பிறகு இருவரும் ஒரே படத்தில் நடித்தாலும் ஜோடியாக நடிக்காமல் இருந்தனர்.
மனோரமா, நாகேஷ் குடும்பத்திற்கு எதிராக என்ன சாட்சி கூறினார் என்பதை பற்றி அவர் இதுவரை வெளியில் சொல்லவில்லை. மேலும் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களால் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது.