வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரஜினி என்னும் இமயமலை! வெறித்தனமான ரசிகர்களின் சோர்வுக்கு இதுதான் காரணம்

ரஜினி படங்களின் வெற்றிக்கும் வசூலுக்கும் காரணமான ரசிகர்கள் தற்பொழுது குறைந்துள்ளது ஏன்? சூப்பர் ஸ்டார் மாஸ் குறைந்து விட்டது என சிலர் காரணங்களை பரப்பிவிட்டாலும் அதன் உண்மை நிலவரமே வேறு. இந்த வயசில் தொடர்ந்து அனைத்து படங்களின் வசூல் நிலவரத்தை பார்த்தால் ஆச்சர்யமே.

காலம் மாறும்பொழுதுலாம் ரசிகர்கள் மாறுவார்கள். இது தியாகராஜா பாகவதர் காலத்தில் ஆரம்பிச்சி எம் ஜி ஆர் வரை நடந்துள்ளது. ஆனால் ரஜினி மட்டும் அவரது கடைசி காலம் வரை தற்போதைய நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

சமீக காலமாக ரஜினி படத்தின் டீசர், பாடல் போன்றவை பெரிய லைக் இல்லை, வியுஸ் வரவில்லை என டிஜிட்டல் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இதற்கு பல காரணம் உள்ளது. ரஜினி ரசிகர்களை பொறுத்த வரையில், சிலர் அரசியல் காரணங்களால் பிரிந்தார்கள், அடுத்து முக்கியமாக வயது முதிர்வு காரணமாக பல ரசிகர்கள் உயிருடனே இல்லை. ஆனாலும் தற்பொழுது வரை குழந்தை ரசிகர்கள் உண்டு. அதான் ரஜினி மந்திரம்.

படையப்பா படத்திற்கு கூட்ட நெரிசலில் டிக்கெட் வாங்குவதில் நடந்த கூத்தில் பலர் இறந்தனர். சிவாஜி படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்காக இரவு முழுக்கு தியேட்டர் கவுன்டரில் படுத்து உறங்கினர். இதெல்லாம் ரஜினியின் இந்த காலத்து ரசிகர்கள், அப்படி என்றால் அவருடைய பழைய ரசிகர்கள் எப்படி இருந்திருப்பார்கள்.

rajini-fan
rajini-fan

அண்ணாத்த படமும் சரி அதற்கு அடுத்து வரும் படமும் சரி படம் ஓடவில்லை என்றாலும் அதே எதிர்பார்ப்பு இருக்கும். ரஜினி படம் ஓடவில்லை என்ற பேச்சி சமீபகாலமாக சுற்றுகிறது. ஆனால் தொடர்ந்து 30 வருடம் அந்த வார்த்தையெல்லாம் கேள்வி பட்டிருக்கவே மாட்டார்கள் அவருடைய ரசிகர்கள்.

தற்போது அஜித், விஜய், சிம்பு, தனுஷ் ரசிகர்கள் கூட்டம் மிரள வைக்கிறது. அதற்கு காரணம் அவர்களுடைய ரசிகர்களின் வயதும் இளமையும்தான். தற்போது உள்ள சோசியல் மீடியாக்கள் அப்பொழுது இல்லை ஆனாலும் ரஜினி என்ற ஒரு மார்க்கெட்டிங் வார்த்தை போதும்.

வேறு ஒரு உதாரணம், தற்பொழுது கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் அவுட் ஆனால் கேட்கப்படும் ரிவீவ் முறை சச்சின் டெண்டுல்கர் காலத்தில் இருந்தால் அவருடைய சாதனையை நினைத்து பாருங்கள். அப்படிதான் தற்பொழுது உள்ள டிஜிட்டல் வாழ்க்கை அப்பொழுது இருந்தால் ரஜினியின் சாதனை என்னவா இருக்கும்.

Trending News