முதுகில் குத்தப்பட்ட தனுஷ், விஷால்.. 2 பேருக்கும் ரெட் கார்டு போடப்பட்ட குற்றத்தின் பின்னணி

2017 முதல் 2019 வரை தயாரிப்பாளர் சங்கம் தலைவராக இருந்தார் விஷால். அப்பொழுது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கிறேன் என்ற பெயரில் அட்ராசிட்டி செய்து வந்தார். அதற்காக சங்க காசுகளை கோடிக்கணக்கில் வீரியம் செய்ததாக இவர் மீது புகார்

சட்டத்திற்கு புறம்பாக புது படங்களை ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தை முடக்குவது, நலிவுற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு உதவுவது என பல நடவடிக்கைகளை எடுத்தார் விஷால், அப்பொழுது தலைவர் விஷாலுக்கு உடந்தையாக இருந்தது சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளரும் தான்.

ரெட் கார்டு போடப்பட்ட குற்றத்தின் பின்னணி

கிட்டத்தட்ட 12 கோடிகள் வரை எடுத்து முறைகேடாக செலவு செய்து விட்டார் என விஷால் மீது குற்றச்சாட்டு சுமத்தி இப்பொழுது அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருக்கிறார்கள் . 2019தில் நடந்த சம்பவம் இது, இப்பொழுது 2024. அன்றைக்கு முறைகேடாக சம்பவம் நடந்தாலும் தலைவர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது அபத்தம் தான்.

இது போக இப்பொழுது தனுஷ் மீதும் ரெட் கார்டு போட்டுள்ளனர். நிறைய பேரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு கால் சீட் கொடுக்கவில்லை என்பது தனுஷ் மீது உள்ள குற்றச்சாட்டு. முரளி ராமசாமி மற்றும் கதிரேசன் இருவரும் தான் இந்த நடவடிக்கைக்கு முதல் காரணமாக இருக்கிறார்கள்.

முரளி ராமசாமி மற்றும் தனுஷ் இருவரும் படம் பண்ணினார்கள் அதற்கு போதிய காசு முரளி ராமசாமியால் கொடுக்க முடியவில்லை. அதனால் தனுஷ் தன் சொந்த காசை கொடுத்து உதவினார். இருந்தபோதிலும் படத்தை முடிக்க முடியவில்லை இதுதான் தனுஷ் மீது உள்ள குற்றச்சாட்டு. முரளி ராமசாமி கவுன்சில் தலைவராகவும், கதிரேசன் செயலாளராகவும் இருக்கின்றனர்.

இப்படி தனுஷும், விஷாலும் வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். பிறருக்கு உதவி செய்யப் போய் தங்கள் பெயரை கெடுத்துக் கொண்டு தண்டனைக்கும் ஆளாகி உள்ளனர். இவர்கள் இருவர் மீதும் இப்பொழுது ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

Next Story

- Advertisement -