நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் என்கின்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி, சிந்து +2 உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால், இப்போது வரை வளர்ந்து வரும் நடிகரின் லிஸ்டிலேயே இருக்கிறார்.
அவருடைய இந்த நிலைக்கு யார் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சாந்தனு பாக்யராஜ் 2008ல் சக்கரகட்டி என்ற படத்தில் அறிமுகமான பிரமாண்டமான திரைப்படம். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் கதையை கேட்கும் போது பல விஷயங்களை பாக்யராஜ் மாற்ற சொன்னார்.
Also Read: முறையாக பரதநாட்டியம் கத்துக்கிட்ட 5 நடிகர்கள்.. அரங்கேற்றம் வரை அடிச்சு தூக்கிய ஜெயம் ரவி
ஆனால் இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று பாக்யராஜ் சொன்னதை ஏதும் கேட்காமல் அந்த படத்தில் நடித்தார் சாந்தனு பாக்யராஜ். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. அதனால் பாக்யராஜ் அதன் பிறகு சாந்தனுவிற்கு கதை கேட்கத் தெரியவில்லை என்று அவரை அடுத்த படங்களின் கதைகளை கேட்டார். அப்படி கேட்கும் சூழலில் சுப்பிரமணியபுரம் படத்தின் கதையை கேட்டு பாக்கியராஜிற்கு பெரிய அளவிற்கு பிடிக்கவில்லை
அதனால் வேறுபடத்தில் சாந்தனுவை நடிக்க வைத்தார். ஆனால் சுப்ரமணியபுரம் யாரும் எதிர்பார்க்காத மிகப்பெரிய வெற்றி பெற்றது. சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் தான் முதலில் சாந்தனு நடிப்பதாக இருந்தது. ஆனால் பாக்யராஜ் அவரை நடிக்க விடவில்லை. ஒரு வேலை அந்த படத்தில் நடித்திருந்தால் இப்போது அவர் நிலைமையே வேறு மாதிரி மாறி இருக்கும்.
Also Read: சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போன 5 வாரிசு நடிகர்கள்.. மகன்களை கரை சேர்க்க தவறிய குரு, சிஷ்யன்
இதை விட்டதற்காக சாந்தனு பாக்யராஜ் மிகவும் வருத்தப்பட்டார். மேலும் சுப்ரமணியபுரம் கைநழுவி சென்ற பிறகு பாக்யராஜ் சாந்தனுவிடம் இனிமேல் கதை தேர்வுகளை நீயே செய்து கொள். உனது வெற்றியை நீயே பார்த்துக்கொள், அது தான் உனக்கும் நல்லது என்று கூறி விலகினார்.
இருப்பினும் பாக்யராஜ் இருக்கும் பொழுதும் வெற்றி பெறவில்லை. பாக்யராஜ் சாந்தனுவை விட்டு விலகி வந்த போதும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் சாந்தனு தன்னுடைய விடாமுயற்சியால் கிடைக்க கூடிய பட வாய்ப்புகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை காட்டி கொண்டிருக்கிறார்.
Also Read: ஜெயிக்க போராட துடிக்கும் 5 சினிமா வாரிசுகள்.. எப்படியோ அப்பா பேரை கெடுக்காம இருந்தா சரி