வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இளையராஜா பயோபிக் ட்ராப் ஆனதன் பின்னணி.. தனுஷ் டெல்லி சென்றும் நோ யூஸ்

ஆரம்பத்தில் ஹிந்தி நிறுவனம் ஒன்று இளையராஜா பயோபிக் படத்தை தயாரிக்க அவரை அணுகியது. பாலிவுட்டின் பிரபல இயக்குனர் பால்கி இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ராயலிட்டி வாங்காமல் இளையராஜா தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என கேட்டுள்ளார்.

அதன் பின் ஒரு சில பிரச்சனைகளால் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து பின் வாங்கியது பாலிவுட் நிறுவனம், அதன்பின் தமிழில் Connekkt மீடியா இந்தப் படத்தை கையில் எடுத்தது. தனுஷ் இந்த படத்தில் இளையராஜாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த பயோபிக் படத்திற்கு இயக்குனராக மாரி செல்வராஜை ஒப்பந்தம் செய்வதா அல்லது கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரனை ஒப்பந்தம் செய்வதா என்பதில் பெரிய குழப்பமே அவர்களுக்கு ஏற்பட்டது. ஒரு வழியாக அருண் மாதேஸ்வரனை தேர்ந்தெடுத்தனர்.

இளையராஜா உடன் இரண்டு மாதங்கள் அருண் மாதேஸ்வரன் டிராவல் செய்தார். முக்கியமாய் இளையராஜா ஊரான பண்ணையாபுரத்திற்கு அவருடன் பயணித்து பல குறிப்புகளை எடுத்துக் கொண்டார். எப்படியும் நினைத்த மாதிரி முடிப்பதற்கு இன்னும் ஆறு மாத காலங்கள் தேவைப்படும் என்பதால் Connekkt மீடியாவும் இதிலிருந்து பின்வாங்கியது.

இப்படி தயாரிப்பதற்கு ஆளில்லாமல் இந்த படம் இழுத்துக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தனுஷ் டெல்லி சென்று அங்கே முக்கியமான ஆட்களை சந்தித்து இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்யவும், தயாரிக்கவும் ஆட்களை தேடி வந்தார்.

ஆனால் எந்த ஒரு நல்லதும் நடக்காததால் இப்பொழுது இந்த படம் ட்ராப் என அறிவித்து விட்டனர். இதனால் தனுஷ் இயக்கியும், நடித்து வரும் இட்லிக்கடை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இளையராஜா படத்தை தத்ரூபமாக எடுக்க முடியாது என ஆரம்பத்திலேயே இந்த படத்துக்கு பல முட்டுக்கட்டைகள் வந்தது.

- Advertisement -

Trending News