Rajini : இன்று சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் கதாநாயகி, நயன்தாரா, குஷ்பூ, மீனா, ஜெயம் ரவி, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த பட பூஜைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரஜினி கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர் வரவில்லை.
இதற்கு காரணமாக சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. அதாவது ஆரம்பத்தில் ரஜினி அரசியலில் இறங்குவதாக கூறினார். பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட அரசியல் கட்சி தற்போது தொடங்க போவதில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் வெளிப்படையாக கூறினார்.
ரஜினி மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையி கலந்து கொள்ளாததற்கு காரணம்
ஆனாலும் அடிக்கடி பாஜகவுடன் ரஜினியை இணைத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் பாஜக மத்திய அமைச்சர் எல் முருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் கண்டிப்பாக ஏதாவது சலசலப்பு வர வாய்ப்பு இருக்கிறது.
அதோடு சுந்தர் சி யின் மனைவி நடிகை குஷ்புவும் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவரும் இந்த விழாவில் கலந்து இருந்தார். அதனால் கூட ரஜினி மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையை தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மற்றொருபுறம் ரஜினி தனது கூலி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இந்த விழாவில் பங்கு பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் ஐசரி கணேஷ் தனது தயாரிப்பில் ரஜினியை நடிக்க வைக்க சில காலமாகவே முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.