வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நெகட்டிவ் விமர்சனங்களால் விழி பிதுங்கி நிற்கும் கார்த்திக்.. சக்சஸ் பார்ட்டி கொண்டாடி வெறுப்பேற்றும் படக்குழு

தற்போது சோசியல் மீடியா அனைத்திலும் விருமன் திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. இந்த படத்திற்காக கார்த்தி கப்பலில் சென்றெல்லாம் ப்ரமோஷன் செய்தார். மேலும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ப்ரமோஷன் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்படி ஏகப்பட்ட செலவு செய்து விளம்பரப்படுத்திய இந்த திரைப்படம் தற்போது பல்வேறு விதமான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இப்படம் எதனால் இந்த அளவுக்கு மோசமாக விமர்சிக்கப்படுகிறது என்பதற்கான காரணங்களை இங்கு சற்று விரிவாக காண்போம்.

முதலில் படத்தின் கதையை எடுத்துக் கொண்டோம் என்றால் அதில் எந்தவிதமான புதிய முயற்சியும் இல்லை. முத்தையாவின் பழைய படங்களில் இருக்கும் சாயல்தான் இதிலும் தெரிகிறது. இதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ். அதேபோன்று கிராமத்து கதை என்றாலே ஹீரோ கரடு முரடாக தான் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. அதை முத்தையா இந்த படத்தில் சற்றும் பிசகாமல் வைத்துள்ளார்.

மேலும் இது போன்ற வில்லேஜ் சப்ஜெக்ட்டில் வீட்டிற்கு மூத்த நபராக ஒரு பாட்டி எப்போதும் இருப்பார். அதேபோன்று வடிவுக்கரசியும் இந்த படத்தில் வந்து செல்கிறார். அடுத்ததாக ஆர்கே சுரேஷ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால் வில்லன் என்ற பெயரில் அவரை காமெடி பீஸ் ஆக்கிவிட்டார்கள் என்பது தான் உண்மை.

கேமரா முன்னால் முகத்தை விறைப்பாக வைக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியிருப்பார் போல. அதனால் ஆர்கே சுரேஷ் மீசை துடிக்க, மூக்கு புடைக்க பயங்கர டெரராக தெரிகிறார். ஆனாலும் மருது படத்தில் ரோலக்ஸ் பாண்டி என்ற கேரக்டரில் மிரட்டி இருந்த அவர் இந்த படத்தில் காமெடியனாக மாற்றப்பட்டு விட்டார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அதிதியின் கேரக்டர் க்யூட் என்ற பெயரில் அரைமெண்டல் போன்று இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் அதிதி பற்றி புகழ்ந்து பேசி இருந்தனர். இதுவே படத்தை காணும் ஆவலை ரசிகர்கள் மத்தியில் தூண்டியது.

ஆனால் படத்தில் அவருக்கு பல இடங்களில் நடிக்க தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது போன்று படத்தில் இருக்கும் பல விஷயங்கள் ஆடியன்சுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. அதுவே விருமன் படத்தின் இந்த தோல்விக்கு காரணமாகவும் இருக்கிறது. இனிமேலாவது கார்த்தி சுதாரித்து கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. இதுல சக்சஸ் பார்ட்டி வேறயா.? அருமையான கூட்டணி.

Trending News