வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மைக் மோகன் இதுவரை குடும்பத்தை காட்டாததன் பின்னணி.. அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Actor Mohan: எண்பதுகளின் காலகட்டத்தில் பெண் ரசிகைகளின் மனதில் காதல் இளவரசனாக இருந்தவர்தான் மோகன். இவருடைய படங்களில் பெரும்பாலும் மைக்கை பிடித்து ஏதாவது ஒரு பாடலை பாடுவது போல் நடித்து விடுவார். இதனாலேயே இவருக்கு மைக் மோகன் என்னும் பெயர் வந்துவிட்டது. மோகன் மற்றும் ரேவதி இணைந்து நடித்த மௌன ராகங்கள் படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

மோகன் தமிழ் சினிமாவில் கமலஹாசனின் இடத்தை பிடிக்க வந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், கமல் பிறமொழி படங்களில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மோகன் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து மக்கள் மனதில் நின்று விட்டார். மோகனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அவருக்கு பின்னணி குரல் கொடுத்த சுரேந்திரன் மற்றும் இசைஞானி இளையராஜா.

Also Read:ரொமான்ஸில் கமலை மிஞ்சிய 5 ஆர்டிஸ்ட்கள்.. இதயத்தில் காதலை சுமந்த முரளி ராம்கி

கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், ரெட்டைவால் குருவி, இதய கோவில் போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார் மோகன். பரமபதம் விளையாட்டில் ஒரே கட்டத்தில் பாம்பு சீண்டியதால் சடாரென கிடைத்த வெற்றி எல்லாம் அப்படியே சறுக்கி விடும். அது போல் தான் மோகனின் வாழ்க்கையும் ஒரே ராத்திரியில் மொத்தமாய் அவருடைய சினிமா வாழ்க்கையை புரட்டி போட்டது போல் ஆகிவிட்டது.

மோகனை சுற்றி வளைத்த வதந்திகள்

1999 ஆம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை ரிலீஸ் செய்த மோகன் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். மோகன், உச்சகட்ட நடிகராக இருந்த காலத்திலேயே தன்னுடைய குடும்பத்தை வெளியில் யாருக்கும் காட்டியது கிடையாது. மோகன் ஒரு டிசைனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை தாண்டி எந்த விஷயமும் வெளியில் தெரியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் சினிமா உலகத்திற்குள் தன்னுடைய குடும்பம் வந்து விடக்கூடாது என்பதில் அவர் ரொம்பவும் உறுதியாக இருந்தது தான். மோகன், எந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தாரோ அதே அளவுக்கு அவரை சுற்றி நிறைய வதந்திகள் இருந்தன. அவர் யாருடன் சேர்ந்து நடித்தாலும் அந்த நடிகையும், மோகனும் காதலிக்கிறார்கள் என வதந்தி பரவி விடும்.

அது போதாது என்று பிரபல நடிகை ஒருவர் அவருடைய காதலை மோகன் ஏற்காததால் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கதை கட்டி விட்டார். மோகனின் சினிமா கேரியர் மொத்தமாக சரிந்ததுக்கு இந்த வதந்தி தான் முக்கிய காரணம். தன்னைச் சுற்றி இருக்கும் வதந்திகள் தன்னுடைய குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்க விடக்கூடாது என்பதால் தான் மோகன் அவருடைய குடும்பத்தை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

Also Read:மைக் மோகன் போல் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்.. மார்க்கெட்டை உடைக்க நடக்கும் சதி

Trending News