சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிகில் பட நடிகைக்கு ரகசியமாக நடந்த திருமணம்.. சர்ச்சில் இருந்து வெளிவந்த புகைப்படம்

விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். இப்படத்தில் ஏராளமான நடிகைகள் கால்பந்து வீரராக நடித்திருந்தனர்.

பிகில் படத்தில் உண்மையாக கால்பந்து விளையாடிய விளையாட்டு வீரர்களும் படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இப்படத்தில் அம்ரிதா ஐயர் இந்துஜா மற்றும் வர்ஷா போன்ற வளர்ந்துவரும் கதாநாயகிகளும் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான சிங்கப் பெண்ணே பாடல் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் யோகி பாபு காமெடி படத்தில் பெரிதும் பேசப்பட்டது.கிட்டத்தட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர்.

reba monica john
reba monica john

இப்படத்தில் கால்பந்து வீரராக மோனிகா நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது அந்த அளவிற்கு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது நீண்ட வருடமாக காதலித்து வந்த தனது காதலரை திருமணம் செய்துள்ளார்.

rebba-monica
rebba-monica

இவர்கள் திருமணம் மிகவும் கோலாகலமாக இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா காலகட்டம் என்பதால்  நெருங்கிய உறவினர்களைத் தவிர மற்ற சினிமா பிரபலங்களை அழைக்காமலேயே ரகசியமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

Trending News