சிம்பு சில வருடங்களாக சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் அவர் மீது குற்றம்சாட்டி ரெக்கார்ட் போடப்பட்டு படங்களில் நடிக்க முடியாத அளவிற்கு செய்து விட்டனர்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்தடுத்து கிட்டத்தட்ட 8 முதல் 10 படங்களில் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் கூட பிரச்சினைகள் சுமூகமாக முடியாமல் இருந்த சூழ்நிலையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.
இப்படி பிரச்சனைகள் துரத்தி துரத்தி வந்த சூழ்நிலையில் சிம்புகாக ஐசரி கணேஷ் களத்தில் இறங்கி உள்ளாராம். அதாவது சிம்புக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து விடலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சிம்பு மேல் போடப்பட்ட ரெக்கார்டு உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் தற்போது முழுமையாக நீக்கப்பட்டு விட்டது. இதனால் மாநாடு, வெந்து தணிந்த காடு, பத்து தல போன்ற படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இந்தப் பிரச்சினைக்காக சிம்புவின் தாயார் பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பிரச்சினைகளை விளக்கிக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலனாக தற்போது வெற்றி கிடைத்துவிட்டது.
இனி சிம்பு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தனக்கான படங்களை அடுத்தடுத்து வெளியிடுவார் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் வேற லெவல் சிம்புவை இனி பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் பாராட்டி வருகின்றனர்.