செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

3 பெரிய படங்களை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்.. தீபாவளியில் நிரம்பி வழிய போகும் உதயநிதியின் கஜானா

Diwali Release Movies : தீபாவளி பண்டிகைக்கு டாப் நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பெரிதும் காத்துக் கொண்டிருந்த மூன்று படங்கள் வெளியாக உள்ளது. அந்த மூன்று படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் பெரிய அளவில் போகவில்லை. இந்நிலையில் கமல் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக மற்ற இரண்டு படங்களை எதிர்பார்க்கலாம். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் தீபாவளி ரிலீஸ் தான் என கூறப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீசாகும் மூன்று படங்கள்

அதோடு இந்த படங்களுக்கு போட்டியாக பல வருடமாக இழுத்தடித்துக் கொண்டிருந்த விடாமுயற்சி படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் லைக்கா தயாரிப்பில் தான் வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்கள் உருவாகி வருகிறது.

ஆகையால் ஒரே நாளில் இரண்டு படங்களையும் வெளியிட்டால் கண்டிப்பாக லைக்கா சிக்கலை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக இதில் ஏதாவது ஒரு படம் அக்டோபர் 10ஆம் தேதி கங்குவாவுடன் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சி தான் கங்குவாவுடன் மோதும் என கூறப்படுகிறது.

இந்த வருடம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியன் 2 படம் தமிழ் சினிமா ரசிகர்களை காலை வாரிவிட்டது. அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கும் இந்த படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகுவதால் ரசிகர்களை மகிழ்விக்கிறதா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

ரெட் ஜெயண்டால் கல்லா கட்டும் உதயநிதி

Advertisement Amazon Prime Banner

Trending News