திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லாத்துக்கும் எங்க தயவு வேணும் சாமி.. வாரிசு போல் லியோவையும் கண்ணசைவில் கண்ட்ரோல் பண்ணும் ரெட் ஜெயண்ட்

Varisu-Leo: விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளிவந்த வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்றது. அதையடுத்து அவர் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திர கூட்டம் நடித்திருக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளிவர இருக்கிறது.

ஆனால் அதில் தான் இப்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தை பொறுத்தவரை ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயவில்லாமல் எந்த படமும் வெளிவர முடியாது. அப்படியே சில படங்கள் வெளி வந்தாலும் வசூல் லாபம் பார்த்து வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான்.

Also read: அம்பானிக்கு தண்ணி காட்டும் லலித் அண்ட் ஏஜிஎஸ்.. கல்லாவை நிரப்ப காட்டும் வியாபார தந்திரம்

ஏனென்றால் இப்போது பாதிக்கும் மேற்பட்ட திரையரங்குகளின் கண்ட்ரோல் அவர்கள் கையில் தான் இருக்கிறது. மீதி திரையரங்கு உரிமையாளர்கள் கூட இவர்களுடைய கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு தான் இருக்கின்றார்கள். மேலும் டாப் நடிகர்களின் பட தியேட்டர் உரிமம் கூட இவர்களுக்குத்தான் செல்லும்.

வாரிசு பட வெளியீட்டின் போது கூட லலித் தான் அதன் தமிழக உரிமையை பெற்றிருந்தார். ஆனால் குறிப்பிட்ட சில ஏரியாக்களை விற்றுவிட்டு மீதியை அவர் ரெட் ஜெயண்ட் கண்ட்ரோலில் தான் ஒப்படைத்தார். அதே போன்ற கதை தான் தற்போது லியோவுக்கும் நடக்க இருக்கிறது.

Also read: விஜய் வேகவேகமாக அதை செய்தே ஆகணும், இல்லனா காணாம போயிருவாரு.. பயமுறுத்தி விட்ட பிரசாந்த்

அதாவது இப்படத்தின் தியேட்டர் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் தான் விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த பேச்சு நடைபெற்று வருகிறது.

அப்படியே ஏஜிஎஸ் நிறுவனம் இந்த உரிமையை வாங்கினாலும் சில ஏரியாக்களை ரெட் ஜெயண்ட்டிடம் ஒப்படைத்து விடுவார்கள். அந்த வகையில் வாரிசு போல் லியோவும் ரெட் ஜெயண்ட் தயவு இல்லாமல் வெளிவராது என்ற நிலையில் இருக்கிறது. இந்த விவகாரம் தான் இப்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: விஜய்யுடன் நடிக்க மறுத்த 3 ஹீரோக்கள்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

Trending News