வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டாக்டர் என்ற ஒரு படம்தான்.. ரெடின் கிங்ஸ்லிக்கு மலையாய் குவியும் வாய்ப்புகள்

ஆடி கார் எப்ப யாருக்கு அடிக்கும் நே தெரியமாட்டேங்குது என ரஜினி முருகன் படத்தில் காமெடி நடிகர் ஒருவர் கூறுவதை போல திடீரென தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ரெடின் கிங்ஸ்லின். இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் நிறைய உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.

என்னதான் வடிவேலு திரும்ப சினிமாவுக்கு வந்தாலும் அவருடைய அடுத்தடுத்த படங்களில் அவருடைய நடிப்பும் காமெடிகளும் எப்படி ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்துதான் காமெடி தமிழ் சினிமாவில் உயிருடன் இருக்கிறதா என்பதை முடிவு செய்ய முடியும்.

ஆனால் அப்படியெல்லாம் யோசிக்காதீங்க நான் இருக்கும் வரை காமெடி வேற லெவல் இருக்கும் எனக்கு எடுத்துக்காட்டி டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி இயக்குனர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார் ரெட் இன் கிங்ஸ்லின் என்ற காமெடி நடிகர்.

முன்னதாக ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி படத்திலும் இவரது சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் டாக்டர் படத்தில் இவருடைய காமெடி கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதிலும் முதல் பாதியில் இவரும் யோகி பாபுவும் சேர்ந்து அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. அதுமட்டுமில்லாமல் ஸ்கூல் பாப்பா கெட்டப்பில் இவர் அடித்த லூட்டி மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

Redin-Kingsley
Redin-Kingsley

இதனால் தற்போது அவரது மார்க்கெட் பெரிய அளவில் நம்ப தொடங்கியுள்ளது. டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு கிட்டத்தட்ட 45 முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் பெரிய பெரிய சம்பளம் கொடுத்து நடிக்க வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இனி சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் இவரை எப்படியாவது உள்ளே இழுத்து விடுவார். ஆக இனி இவரது வாழ்க்கையில் வசந்த காலம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். அடுத்து நெல்சன் இயக்கும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாக்டர் படம் மட்டுமல்லாமல் வேறு எந்தெந்த படங்களில் ரெடிங் கிங்ஸ்லின் நடித்த காட்சிகள் உங்களுக்கு பிடித்தது? என்பதை கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.

Trending News