தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் ரெஜினாவை பிரபல தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. அதன்பிறகு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு சினிமா அவரை சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது. தெலுங்கில் ரெஜினா நடித்த முதல் படமான சிவா மனசுலோ ஸ்ருதி என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இது தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மாறி மாறி நடித்து வந்தார். தற்போது ஓரளவுக்கு கவனிக்கப்படும் நாயகியாக உயர்ந்திருக்கும் ரெஜினா சமீபத்தில் தைரியமாக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்த செய்தியை ஓபனாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரெஜினாவுக்கு இருபது வயது இருக்கும் போது ஒரு தயாரிப்பாளர் படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே பட வாய்ப்புக்காக சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது ரெஜினாவுக்கு தயாரிப்பாளர் என்ன சொல்கிறார் என்பது சரியாக புரியவில்லையாம்.
அதனைத் தொடர்ந்து தன்னுடைய மேனேஜரிடம் விசாரித்தபோதுதான் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தது எனவும், அதன்பிறகு அவருடைய போன் காலை எடுக்கவே இல்லையாம். மேலும் பல வகையில் ரெஜினாவுக்கு தொந்தரவு கொடுத்தாராம் அந்த தயாரிப்பாளர்.
இதனை ரெஜினா தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் மற்ற நடிகைகளைப் போல மேலோட்டமாக அந்த விஷயத்தை கூறியுள்ளார். 20 வயதில் நடந்ததை அப்போது சொல்ல தைரியம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் சொல்ல வேண்டும் என கேட்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.