தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் ரெஜினா கஸன்ட்ரா வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.
தமிழில் இவர் நடிப்பில் வெளியான சக்ரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மாநகரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதையடுத்து இவருக்கு தெலுங்கு சினிமாவில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் தற்போது பல படங்கள் நடித்து வருகிறார்.
ரெஜினா கஸன்ட்ரா பார்ட்டி மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது ரெஜினா கசாண்ட்ரா கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ரெஜினா கசாண்ட்ரா சூர்ப்பனகை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரெஜினா கஸன்ட்ரா ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
![soorpanagai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/survanagai.jpg)
அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெஜினா கெஸன்ட்ரா ஒரு எலும்புக்கூட்டை ஆராய்ச்சி செய்து வருகிறார். இதனை பார்க்கும் போது ஒரு கொலையை சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என தெரியவருகிறது. மேலும் அந்த கொலை யார் செய்துள்ளார் என்பது கண்டறிவதே ரெஜினா கசாண்ட்ராவின் கதாபாத்திரமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது புகைப்படம் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.