புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பல வித்தைகளை கற்றுக் கொள்ளும் ரெஜினா.. எல்லாத்துக்கும் இதுதான் காரணமா?

கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தோல்வியை சந்தித்தன.

பெரிய அளவில் வெற்றி பெற முடியாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் குடியேறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பாண்டிராஜ் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரெஜினாவை இழுத்து வந்தார்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்ததால் இப்படம் வெளிவந்த காலத்தில் ரெஜினா மிகவும் பிரபலமாக இருந்தார்.

regina-cinemapettai
regina-cinemapettai

மாநகரம் படத்தின் மூலம் மீண்டும் தனது வெற்றியை நிரூபித்தார். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் எந்த படங்களும் கைகொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை.

தற்போது ரெஜினா கஸன்ட்ரா விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள புதிய படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதனால் கராத்தே மற்றும் குங்பூ போன்ற சண்டைப் பயிற்சிகளை கற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Trending News