செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஆண்களை அசிங்கப்படுத்திய ரெஜினா.. கைத்தட்டி சிரித்து சிக்கலில் மாட்டிய நிவேதா

சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழ் படங்களில் தொடர்ந்து பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார். எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது அதிகமாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ரெஜினா ஷாகினி டாகினி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read :மட்டமாக நடந்து கொண்ட ரெஜினா.. காசுக்காக கண்டதை செய்து அசிங்கப்பட்ட பொழப்பு

இப்படத்தின் ப்ரோமோஷனுகாக ரெஜினா பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த வருகிறார். அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது ரெஜினா ஆண்களைப் பற்றிய தவறாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஆனால் இதைப் பற்றி எதுவும் விமர்சிக்காமல் சிரித்துக்கொண்ட சிக்கலில் மாட்டியுள்ளார் நிவேதா. அதாவது ஆண்கள் என்றால் பெண்களைப் பார்த்து ரொம்ப வழிவார்கள். மேலும் ஆண்களும் மேகியும் ஒன்றுதான். ஏனென்றால் இரண்டுமே இரு நிமிடங்களிலேயே முடிந்துவிடும் என்று உள்ளர்த்தம் வைத்து பேசி இருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வெளியானவுடன் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read :ஐட்டம் டான்ஸில் சமந்தாவை மிஞ்சும் ரெஜினா.. அநியாய கவர்ச்சியில் வெளிவந்த வீடியோ

அதாவது ஒரு ஆண் நடிகர் இது போன்ற பெண்களை விமர்சித்து வந்தால் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழும். அதுமட்டுமின்றி மாதர் சங்கத்தையே கூட்டி வந்து விடுவார்கள். மேலும் உங்களுக்கு அப்பா, அண்ணன் போன்றோர் இருக்கும்போது இப்படி பேசுகிறீர்களே. உங்களுக்கு வெட்கமா இல்லையா என ரெஜினாவை விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ரெஜினா பேசிய இந்த வீடியோவை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள். ரெஜினா படம் வெளியாவதற்கு முன்பே இவ்வாறு ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளதால் இந்த படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என கூறப்படுகிறது.

Also Read :விருது வழங்கும் விழாவிற்கு வித்தியாசமாக வந்த ரெஜினா.. மெர்சலாக பார்த்த சினிமா பிரபலங்கள்.!

Trending News