வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உருவ கேலியால் கவின் படத்தில் நிராகரிக்கப்பட்ட நடிகை.. ஓபன் ஆக பேட்டி கொடுத்ததால் அதிர்ச்சி

கவின் நடிப்பில், நெல்சனின் உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் எழுதி இயக்கிய படம் ப்ளடி பக்கர். இப்படத்தை நெல்சன் தயாரித்திருந்தார். சுஜித் சாரங் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. ஆனால், இப்படத்தின் ரிலீஸன்றே ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனம் பெற்றது.

10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தீபாவளியை ஒட்டி ரிலீஸாகி 4 நாட்களில் ரூ.5 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இப்படத்தை பார்க்கிங், கருடன், மகாராஜா ஆகிய சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தான் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்தது.

தீபாவளி ரேஸில் வெளியான அமரன் ( 50 கோடிக்கு மேல்), பிரதர் ( 7 கோடிக்கு மேல் ) ஆகிய படங்கள் வசூலித்து வரும் நிலையில், கவின் நடிப்பில் ஸ்டார் படத்துக்குப் பின் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவின் சொத்துக்காக வாரிகள் அடிதடியில் ஈடுபட்டிருக்கும் போது, இடையில் ஒரு பிச்சைக்காரன் வந்து அவர்களிடம் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் இப்படத்தின் கதை. சுவாரஸ்யாக எடுக்க வேண்டிய கதையை, அதிக லேக்குடன் படக்குழு எடுத்திருப்பதாக ரசிகர்களும், விமர்சகர்களும் கருத்துக் கூயிருந்தனர்.

ப்ளடி பெக்கர் படத்தில் நிராகரிக்கப்பட்ட திவ்யா

இந்தப் படத்தில் நடிகையும் மாடலுமான திவ்யாவும் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது பற்றி மீடியாவுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ப்ளடி பக்கர் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு லுக் டெஸ்ட் முடிந்த பின், சிவபாலனுக்கு திருப்தி வரவில்லை. ஏனென்றால் அக்கதாப்பாத்திரத்துக்கு நான் இளமையாக இருப்பதாக கூறி என்னை ரிஜக்ட் செய்தார்.

கிடைத்த வாய்ப்பு போய்விட்டதே என வருத்தத்தில் இருந்தேன். அதன்பின், மீண்டும் அழைத்த சிவபாலன், லுக் டெஸ்ட் எடுத்து என்னை ஓகே செய்தார். பொதுவாக கூடுதல் எடை இருந்தால் காமெடி கேரக்டர்தான் இருக்கும்., ஆனால், இப்படத்தில் புதிய திவ்யாவாக இப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூடுதல் எடையுடன் இருப்பது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகள் கூறிய நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து முயற்சித்து, இன்று படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துள்ளது அப்படமும் வெளியாகியுள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

snazzytamilachi dhivyaa
snazzytamilachi dhivyaa

பேசுபவர்களும், கிண்டல் செய்பவர்களும் அதே இடத்தில் அப்படியே தான் இருப்பார்கள். நீங்கள் திறமையால் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள் என்று அவரது ரசிகர்கள் ஆறுதலும் வாழ்த்துகளும் கூறி வருகின்றனர். இப்படத்தின் மூலம் மேலும் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகரிக்கும் என தெரிகிறது.

Trending News