வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என் கூட படுத்தா எவ்வளோ காசு கொடுப்பீங்க.? அட்ஜஸ்ட்மெண்ட் போன் காலுக்கு இரவின் நிழல் நடிகை பதில்

தற்போது எங்கு திரும்பினாலும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை தான் அதிகமாக கேட்க முடிகிறது. அந்த வகையில் சினிமா துறையில் இது மிகப்பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இதைப் பற்றி பேச தயங்கிய நடிகைகள் தற்போது தைரியமாக பேசி வருகின்றனர்.

பேசுவது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரையையும் சில நடிகைகள் கிழித்தெறிந்து வருகின்றனர். அப்படி ஒரு அனுபவம் தான் ஒரு நடிகைக்கு நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் பரபரப்பை கிளப்பியவர் நடிகை ரேகா நாயர்.

Also read : பெட்ரூம் திறந்திருந்தா எட்டிப் பார்க்கத்தான் செய்வேன்.. உச்ச கட்ட திமிருடன் பேசிய பயில்வான்

மனதில் பட்டதை மிகவும் தைரியமாக பேசக்கூடிய அவர் புரட்சிகரமான கருத்துக்களையும் கூறி வருகிறார். அதேபோன்று இவரை தவறான கண்ணோட்டத்துடன் அணுகும் ஆண்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைரியமான பெண்மணியாகவும் இருந்து வருகிறார்.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவரிடம் இயக்குனர் ஒருவர் போனில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டிருக்கிறார். இதற்கு எந்த கோபமும் படாத ரேகா நாயர் என்னுடன் படுத்தால் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்டு அந்த இயக்குனரையே அதிர வைத்திருக்கிறார்.

Also read : ஆர்வக்கோளாறால் பறிபோன வாய்ப்பு.. சொதப்பலில் முடிந்த ரேகா நாயர் போட்ட பிளான்

மேலும் அவர் கூறிய தொகையை கேட்ட அவர் என்னுடைய உடலுக்கு இவ்வளவுதான் கொடுப்பீர்களா என்று கேட்டிருக்கிறார். அவர் எந்த உள்ளர்த்தத்துடன் பேசுகிறார் என்பதை புரிந்து கொண்ட அந்த இயக்குனர் மன்னிப்பு கேட்டுவிட்டு போன் காலை கட் செய்து இருக்கிறார்.

இந்த விஷயத்தை ரேகா நாயர் தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுபோன்று இன்னும் சில மோசமான அனுபவங்களையும் சந்தித்திருக்கும் அவர் சக நடிகைகள் தைரியமாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நான் இதுபோன்று பேசுபவர்களிடம் தைரியமாக பேசுவதால் தான் யாரும் என்னை தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருக்கும் இந்த விஷயம் தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read : நடுரோட்டில் டிரெஸ்ஸை அவுத்து காட்டவா என கேட்ட ரேகா நாயர்.. பயில்வானுக்கு பதில் சொன்ன பார்த்திபன்

Trending News