திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அப்படி இப்படின்னு படத்தை வியாபாரம் செய்த அண்ணாச்சி.. ரிலீஸ் எப்போது தெரியுமா.?

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தி லெஜன்ட். இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடித்திருக்கிறார். மேலும் மறைந்த சின்னத்திரை கலைவாணர் விவேக் தி லெஜன்ட் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தி லெஜன்ட் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என ஒரு பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சென்றது.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களாக உள்ளவர்களின் படங்கள் கூட இந்த அளவுக்கு ட்ரெண்ட் ஆனது இல்லை. போற போக்க பார்த்தால் ரஜினி, விஜய் போன்ற நடிகர்களுக்கே அண்ணாச்சி டாப் கொடுப்பார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் அதே அளவுக்கு அண்ணாச்சி படத்திற்கு ட்ரோல்கள், மீம்ஸ்கள் என இணையத்தில் வெளியானது.

மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை பார்த்து கோலிவுட்டே வாய் பிளந்தது. ஏனென்றால் பத்திற்கும் மேற்பட்ட நடிகைகள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

மேலும் பாலிவுட்டில் இருந்தும் பல நடிகைகளை கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தி லெஜன்ட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 15ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் தி லெஜன்ட் படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதம் அருண் விஜய் நடித்துள்ள யானை படமும், மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி படமும் வெளியாக உள்ளது. இதனால் அண்ணாச்சி படத்திற்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News