செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பெயர் மாற்றத்துடன் இளையராஜா இசையில் பொன்னின் செல்வனை வெப் சீரிஸாக வெளியிட புதிய திட்டம்

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருட காலமாக மொத்த படப்பிடிப்பும் தடைபட்டது. இந்நிலையில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஹைதராபாத்தில் ஒரு பெரிய செட் போட்டு பொன்னியின் செல்வன் பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க அமரர் கல்கியின் நாவலை படம் பிடிக்க பலருக்கும் ஆர்வம் உண்டு, அப்படி பட்ட ஒருவர் தான் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் அஜய் பிரதீப். எடர்னிட்டி மோஷன் கிராஃப்ட் பிரைவேட் லிமிடட் மற்றும் எடர்னிட்டி ஸ்டார் இணைந்து இந்த வெப் ஃபிலிம் சீரிஸைத் தயாரிக்கிறது.

பொன்னியின் செல்வன் என்ற தலைப்பினை சிரஞ்சீவி பொன்னியின் செல்வன் என்ற பெயர் மாற்றத்துடன் உருவாக்கப்படும் 125 மணி நேர எபிசோட் வெப் சீரியலாக  பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட  திட்டமிட்டுள்ளது இந்த டீம்.

siranjeevi ponniyin selvan

எனவே படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தவுடன் சிரஞ்சீவி பொன்னியின் செல்வன் வெப் சீரியலாக ஓடிடி தளத்தின் வாயிலாக முதல் 4 வாரங்களுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன் பிறகு 4 மாதம் கழித்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணி நேரம் என்று மாதத்திற்கு தலா 8 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ்வாறு மொத்தம் 9 சீசன்களாக சிரஞ்சீவி  பொன்னியின் செல்வன் திரையிடப்படும். மேலும் ஒவ்வொரு சீசன் இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கும்படி சிரஞ்சீவி பொன்னியின் செல்வன் வெப் சீரியல்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் என அனைத்தையும் பார்த்து பிடித்து போக இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டாராம்.  இப்படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குநராகப் பணியாற்றவிருக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்யவிருக்கிறார். விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஓவியங்களை பாகுபலி புகழ் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மணியன் செல்வம் உடைகள் வடிவமைப்பு மேற்கொள்கின்றனர்.

Trending News