வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புருஷனை வச்சு வீட்டை ரெண்டாக்க தந்திரம் பண்ணும் ரேணுகா.. தர்ஷினியை காப்பாற்றிய ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை விட்டு ஞானம் மற்றும் கதிர் திருந்தி பிரிந்து வந்து விட்டார்கள். இவர்கள் திருந்தியதால் ரேணுகா மற்றும் நந்தினியின் ஒற்றுமைக்குள் மிகப்பெரிய விரிசல் வர ஆரம்பித்துவிட்டது. அதுவும் ரேணுகாவிற்கு அவருடைய அம்மா லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து வியாபாரம் பண்ண சொல்லி இருக்கிறார்.

இதனால் கையில் பணம் இருக்கும் தெனாவட்டில் ரொம்பவே ஓவராக ஞானம் மற்றும் ரேணுகா நடந்து கொள்கிறார்கள். இதுவரை நந்தினி மீது பாசத்தையும் அன்பையும் காட்டி வந்த ரேணுகா தற்போது எனக்கென்ன என்று யாரோ மாதிரி பேசி விலக ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் ஞானம் ஒரு பேச்சுக்கு வெளியில் போய் சாப்பிடலாமா என்று சொன்னார்.

உடனே ரேணுகா இதுதான் கிடைத்த சான்ஸ் என்று ஞானத்திடம் இதே மாதிரி இருங்கள். மறுபடியும் உங்கள் புத்தி மழுகி போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அடிபணிந்து விடாதீர்கள் என்று ஏத்தி விட்டு பேசுகிறார். இதுவே பழைய ரேணுகாவாக இருந்தால் நீங்கள் பண்ணுவது தப்பு தான் அவர்களிடம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து பேசி இருக்கலாம் மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்லி இருப்பார்.

Also read: ரோகினிடம் சிக்கிய முத்து, குடும்பத்திற்கு தெரிய வரும் உண்மை.. ரவிக்கு மாமியார் கொடுக்கும் டார்ச்சர்

ஆனால் தற்போது பணம் மற்றும் புருஷன் நம்மிடம் இருக்கும் திமிரில் ஓவராக ஆட்டம் போட்டு ஞான சூனியமாக ஞானத்தை மாற்றி விட்டார். அந்த வகையில் ஹோட்டலில் போய் சாப்பிடலாம் யார் என்ன சொன்னாலும் நம்ம போறோம் என்கிற மாதிரி கிளம்பி வந்து விடுகிறார்கள். இதை சாதாரணமாக கதிர் கேட்ட பொழுது ஞானம் ரொம்பவே ரோஷத்துடன் குதிக்கிறார்.

ஆக மொத்தத்தில் ரேணுகாவின் கெட்ட புத்தியால் தான் ஞானம் மற்றும் கதிருக்குள் சண்டை வரப்போகிறது. பாவம் இவர்களுக்கிடையில் நந்தினி வழக்கமாக எதார்த்தமான பேச்சுடன் பேசி மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அடுத்தபடியாக தர்ஷினியை கடத்தி வைத்தது யார் என்று கண்டுபிடித்து நெருங்கி விட்டார்கள். இருந்தாலும் போலீஸ் கையில் அதிகாரம் இருப்பதால் அவர்களை பிடித்து விசாரணை செய்திருந்தால் அனைத்து விஷயங்களும் தெரியவந்திருக்கும்.

அதை விட்டுவிட்டு அவர்களை பாலோ பண்ணி தர்ஷினியை கண்டுபிடிக்கணும் என்று சொதப்பி வருகிறார்கள். பாவம் தர்ஷினி இனி யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை என்று மறுபடியும் அவர்களிடமிருந்து தப்பித்து விட்டார். ஆனால் கடைசியில் தர்ஷினி மீண்டும் யார் கையிலும் சிக்க போறது இல்லை. ஜீவானந்தம் தர்ஷினியை காப்பாற்றி குற்றவை-யிடம்கு ஒப்படைக்க போகிறார்.

Also read: ரோகிணிக்கு மாமியாரும் கணவரும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்.. முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணிய மச்சான்

Trending News