Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஜெயிலுக்குள் இருக்கும் குணசேகரனை பார்க்க வேண்டும் என்று ஞானம் மற்றும் சத்தி நினைக்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் குணசேகரன், கதிர் மட்டும் என்னை பார்த்தால் போதும் என்று கதிரை பார்ப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அப்படி உள்ளே போய் குணசேகரனை பார்த்த கதிர், அண்ணனை நினைத்து பீல் பண்ணி அழுகிறார்.
அப்பொழுது கதிருக்கு ஆறுதல் சொல்லிய குணசேகரன், நான் வெளியே வருவதற்குள் சில விஷயங்களை மாற்ற வேண்டும். சொத்துக்காக அடித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு முடிவு பண்றேன். அதன் பின் நான் வெளியே வருகிறேன் என்று சொல்கிறார். அந்த வகையில் உள்ள இருந்து கொண்டே குணசேகரன், வெளியே லட்சியத்திற்காக போராடும் நான்கு பெண்களுக்கும் குடச்சல் கொடுக்கப் போகிறார்.
அதற்கான அஸ்திவாரத்தை தான் குணசேகரன் போட போகிறார். ஆனால் அண்ணனை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ஞானம், சக்தியிடம் புலம்பி தவிக்கிறார். அப்பொழுது ஞானத்தை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வரும் வழியில் ரேணுகா பரதநாட்டியம் ஆடும் ஓனருடன் இருக்கும் போஸ்டரை பார்த்து விடுகிறார். அதனால் கோபப்பட்ட ஞானம் வீட்டிற்கு போய் ரேணுகாவிடம் சண்டை போட போகிறார்.
இதற்கிடையில் நந்தினி அவருடைய மசாலா பிசினஸ் மூலம் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து தயாரிக்கிறார். அதனால் நந்தினி எதிர்பார்த்தபடி கடையில் அவருடைய மசாலா பொடி வியாபாரம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மற்ற கம்பெனி பொருட்களின் உரிமையாளர்கள் வந்து அந்த கடையில் விசாரிக்கிறார்கள்.
அதன்படி நந்தினி தயாரிக்கும் மசாலா பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறார்கள். உடனே நந்தினி தயாரிக்கும் பொருளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக தொடர்ந்து பிரச்சினை கொடுக்கப் போகிறார்கள். இனி இதையெல்லாம் சமாளிக்கும் விதமாக நந்தினி போராட வேண்டும். இன்னொரு பக்கம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெற வேண்டும்.
அடுத்ததாக கோபத்துடன் வீட்டுக்கு வரும் ஞானம், ரேணுகாவிடம் வாய்க்கு வந்தபடி சண்டை போடுகிறார். நீ எப்படி அவன் கூட நெருங்கி போட்டோ எடுப்பாய், நீ எல்லாம் ஒரு குடும்ப பொண்ணா? யாரையும் மதிக்காமல் உன் இஷ்டப்படி இருப்பதற்கு நீ ஏன் இங்கு இருக்க வேண்டும் என்று கோபமாக கொந்தளிக்கிறார். இந்த வார்த்தை எல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த ரேணுகா, நீ என்னைக்கு சுயமாக சம்பாதித்து கொடுக்க வேண்டிய கடனை மூஞ்சில் தூக்கி வீசிறியோ அப்ப வந்து வீர வசனமாக பேசு.
இப்பொழுது ஒழுங்காக வேலையை பார்த்து சம்பாதிக்க பழகு என்று சரியான பதிலடி கொடுத்து விட்டார். ஓவராக துள்ளிக் கொண்டிருந்த ஞானத்தின் கொட்டத்தை ரேணுகா ஒரே வார்த்தையில் அடக்கி விட்டார். இவ்ளோ பிரச்சனை நடந்தும் ஒரு ஓரமாக நின்னு கதிர் சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் வட்டிக்கு கடன் வாங்கிய நபரிடம் பணத்தை திருப்பி கொடுக்காமல் செருப்படி வாங்கினதை மறந்து விட்டார்.
அது மட்டும் இல்லாமல் கதிர் முழுசா திருந்தவும் இல்லை, கெட்ட புத்தி மாறவும் இல்லை என்பதற்கு ஏற்ப புரியாத புதிராக தான் ரெண்டும் கெட்டா நிலைமையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளையும் வெளியில் வரும் சிக்கல்களையும் சமாளித்து எப்படி பெண்கள் முன்னேறி காட்ட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக எதிர்நீச்சல் தொடர்கிறது கதை சுவாரசியமாக நகர்ந்து கொண்டு வருகிறது.