தமிழில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்த கே எஸ் ரவிக்குமார் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணிபுரிந்துள்ளார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி இருக்கும் அவர் சமீபத்தில் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவின் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அப்படம் தியேட்டர்களில் சில நாட்கள் கூட ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கேஎஸ் ரவிக்குமார் மனம் உடைந்து போயிருக்கிறார். இப்பொழுது எல்லாம் தியேட்டர்களில் பெரிய ஹீரோக்கள் மற்றும் மெகா பட்ஜெட் படங்கள் தான் வசூலை வாரி குவிக்கிறது. அது போன்ற படங்களை பார்ப்பதற்கு தான் கூட்டமும் வருகிறது.
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் குறைவான பட்ஜெட்டாக இருந்தாலும் தனுஷ் என்ற பெயருக்காகவே அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. தற்போது அந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் வேட்டையாடி வருகிறது.
மேலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கூட தற்போது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பெரிய ஹீரோக்கள் நடிக்கிறார்கள் என்பதுதான். அதனால் தான் கூகுள் குட்டப்பா போன்ற திரைப்படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பு கிடைப்பதில்லை.
Also read:ரெண்டே படத்தினால் காணாமல் போன கேஎஸ் ரவிக்குமார்.. ரூட்டை மாத்தி கண்டுக்காத ரஜினி
இதுபோன்ற நிலைமை மாறவேண்டும் என்று கே எஸ் ரவிக்குமார் தற்போது ஆதங்கத்துடன் பேசி வருகிறார். மேலும் சிறிய பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க மக்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் இன்னும் சில நாட்களில் ஓடிடியில் படம் வெளிவந்து விடும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.
பெரிய நடிகர்களுக்கு கொடுக்கும் ஆதரவை வளரும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் தர வேண்டும் என்று கூறிய கே எஸ் ரவிக்குமார் கூகுள் குட்டப்பாவின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை ஓரளவுக்கு லாபகரமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Also read:கே எஸ் ரவிக்குமாரின் 12 படத்தில் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர் இவர்தான்.. ரஜினி கமலை விட ஒஸ்தியாம்!