புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் வரும் சூப்பர் ஹிட் இயக்குனர்.. பாரதிராஜா, ஜிவிஎம், வைரமுத்து என சேரும் மெகா கூட்டணி

தற்போது தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் 2000 ஆம் ஆண்டுகளில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்த பழைய ஹிட் இயக்குனர் ஒருவர் மீண்டும் களத்தில் குதிக்கிறார். 

ஆரம்பத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது அவர் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுக்கிறார். படம் தான் சின்ன பட்ஜெட்.

Also Read: கனவு படத்திற்கு வழி விடாத உடல்நிலை.. இதுதான் என் கடைசி படம் ஒரே போடாய் போட்ட பாரதிராஜா

ஆனால் அதில் நடிக்கும் நடிகர்களும் ஆர்டிஸ்ட்களும் வேற லெவல். கருமேகங்கள் கலைகின்றன என்ற ஒரு படத்தை தங்கர் பச்சான் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஆர்டிஸ்ட்டுகள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், வைரமுத்து என பெரிய பெரிய ஜாம்பவான்களாக இருக்கிறார்கள்.

இவர்களுடன் காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் அதிதி பாலன் உள்ளிட்டோரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Also Read: பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கும் இந்த படத்தை சிறுகதை ஒன்றை தழுவி உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டு ஜனவரி மாதத்தில் நிறைவடைந்து, இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெகு நாட்களுக்குப் பிறகு தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் கமலஹாசன் வெளியிட்டார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருப்பதால் விரைவில் ரிலீஸ் செய்தியும் வெளியாக உள்ளது.

Also Read: மண் வாசனையுடன் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பாரதிராஜாவின் 6 படங்கள்.. 200 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி படம்

Trending News