புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் இணையும் ஆயுத எழுத்து கூட்டணி.. டாப் ஹீரோயினை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய படக்குழு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மாதவன், சித்தார்த், சூர்யா ஆகியோர் நடிப்பில் அவர் இயக்கிய ஆயுத எழுத்து படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அந்த வகையில் மாதவன் இயக்கி நடித்து இருந்த ராக்கெட் தி நம்பி விளைவு படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆயுத எழுத்து ஹீரோக்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் சஷிகாந்த் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

Also read: முரட்டுத்தனமாய் மாறிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. மாதவனை கொடூரனாய் மாற்றிய மணிரத்தினம்

கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். மேலும் இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் டாப் நடிகையான நயன்தாராவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்போது நயன்தாரா பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இது தவிர ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். சமீபகாலமாக தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்த நயன்தாரா இப்போது படங்களில் நடிக்க காட்டி வருகிறார். அதன்படி நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

Also read: நம்பிக்கை இல்லாமல் 20 லட்சத்தை பாக்கி வைத்த தயாரிப்பாளர்.. சூர்யா செய்த தரமான சம்பவம்

மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் மாதவன், சித்தார்த் இணையும் புதிய படத்திலும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அதாவது சமீப காலமாக நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தற்போது சினிமாவில் முழு வீச்சாக இறங்கி உள்ளார். மேலும் முதல் முறையாக மாதவன், சித்தார்த், நயன்தாரா மூன்று பேரின் கூட்டணி இணைந்து உள்ள படத்திற்கான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.

Also read: சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Trending News