வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மீண்டும் இணையும் ரஜினியின் வெற்றி காம்போ.. இயக்குனர் கொடுத்த அப்டேட்

Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து இப்போது லோகேஷின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படம் வெற்றி படமாக பார்க்கப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு வசூல் புயல், மழை காரணமாக பெறவில்லை.

ஆனாலும் கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் வெற்றி காம்போ மீண்டும் இணைய உள்ளது. இதை ரஜினி பட இயக்குனரை சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

அதாவது ரஜினியின் கேரியரில் மிக முக்கியமாக பார்க்கப்படும் படம் தான் ஜெயிலர். அண்ணாத்த படம் படுதோல்வி அடைந்த நிலையில் அதிலிருந்து ஒரு மாபெரும் வெற்றியை ரஜினிக்கு நெல்சன் கொடுத்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன் பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தது.

மீண்டும் ரஜினியுடன் இணையும் இயக்குனர்

அவற்றையெல்லாம் தவிடு பொடி ஆக்கிவிட்டு 650 கோடி வசூலை ஜெயிலர் படம் பெற்றது. இப்போது நெல்சன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கவினின் பிளடி பக்கர் படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில் ப்ரமோஷன் நடந்து வருகிறது.

இதில் நெல்சனும் கலந்து கொண்டு வரும் நிலையில் ரஜினியுடன் மீண்டும் இணைய போவதாக கூறி இருக்கிறார். அதுவும் கூலி படம் முடிந்த கையோடு ரஜினி, நெல்சன் காம்போ மீண்டும் இணைய இருக்கிறது. ஆனால் இது ஜெயிலர் 2 படமா அல்லது வேறு புது படமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் ஏற்கனவே நெல்சன் ஜெயிலர் 2 படத்தை எடுக்க உள்ளேன் என்பதை கூறியிருந்தார். ஆகையால் அந்தப் படத்திற்கான ஏற்பாடு தான் இப்போது நெல்சன் செய்து வருவதாக தெரிகிறது. அடுத்த வசூல் வேட்டைக்கு ரஜினி தயாராக உள்ளார்.

Trending News