தென்னிந்திய சினிமாவில் 80’s மற்றும் 90’s காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மித்ர் மை பிரெண்ட்: முதலில் ரேவதி இயக்கிய ஆங்கில திரைப்படம் 2002ல் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’. இப்படத்தில் ஷோபனா, நாசர் அப்துல்லா, ப்ரீத்தி விசா, ரேவதி என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு நேஷனல் அவார்ட் ஆப் பெஸ்ட் ஃபிலிம், ஷோபனா நடிப்பிற்காக ஒரு தேசிய விருது, எடிட்டிங்க்கும் ஒரு தேசிய விருது கிடைத்தது.

பிர் மிலேங்கே: 2004 ஆம் ஆண்டு ரேவதி இயக்கிய இந்தி திரைப்படம் பிர் மிலேங்க. இதில் ஷில்பா ஷெட்டி, சல்மான் கான், அபிஷேக் பச்சன், ரேவதி, நாசர், கமலினி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி எடுக்கப்பட்ட படம்.

கேரளா கஃபே: முதல் முறையாக மலையாளத்தில் பத்து இயக்குனர்கள் கொண்டு எடுக்கப்பட்ட படம் கேரளா கஃபே. 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படத்தில் மம்முட்டி, ரகுமான், ஜெயசூர்யா, திலீப் , சுரேஷ் கோபி, பிரித்திவிராஜ் , பகத் பாசில், நித்யா மேனன், நவ்யா நாயர் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் 2009இல் அபுதாபி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
