100 நாட்களுக்கு மேல் ஓடிய ரேவதி திரைப்படங்கள்
மண்வாசனை

பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்வாசனை. இப்படத்தில் ரேவதி, வினு சக்கரவர்த்தி மற்றும் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடல் நல்ல வெற்றியை பெற்றது. பாரதிராஜாவின் படங்களில் மிக முக்கிய படமாகும். ரேவதிக்கும் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகும்.
வைதேகி காத்திருந்தாள்

ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தில் விஜயகாந்த் ,கவுண்டமணி, செந்தில், பரிமளம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் ரேவதி ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
கைதியின் டைரி

பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி நடிப்பில வெளியான திரைப்படம் ஒரு கைதியின் டைரி. இப்படத்தில் கமலஹாசன், ராதா, விஜயன் மற்றும் வினுசக்கரவர்த்தி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன.
மௌன ராகம்

மணிரத்னம் இயக்கத்தில் ரேவதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மௌன ராகம். இப்படத்தில் கார்த்தி மற்றும் மோகன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. ரேவதியின் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகும்.
புன்னகை மன்னன்

கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இப்படத்தில் ரேகா, ஸ்ரீவித்யா, சுந்தர் கிருஷ்ணா, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன.
டிசம்பர் பூக்கள்

எம்.ஆர். பூபதி இயக்கத்தில் ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிசம்பர் பூக்கள். இப்படத்தில் மோகன், நளினி மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது. படமும் வெற்றிபெற்றது.
உதயகீதம்

ராஜேந்திரன் இயக்கத்தில் மோகன், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் உதயகீதம். இப்படத்தில் லட்சுமி, கோவை சரளா மற்றும் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. மோகன் மைக் மோகன் ஆனார்.
இதயத் தாமரை

கார்த்திக்கின் ஆஸ்தான இயக்குனர் ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் இதயத் தாமரை. இப்படத்தில் ஜனகராஜ் மற்றும் நிழல்கள் ரவி பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி வேலை செய்தது.
கிழக்கு வாசல்

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் கிழக்கு வாசல். இப்படத்தில் குஷ்பு, விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெற்றி பெற்று ரேவதியின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. கார்த்திக், ரேவதி நடிப்பில் பல படங்கள் இந்த காலகட்டத்தில் வந்தது.
அஞ்சலி

மணிரத்னம் இயக்கத்தில் ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சலி. இப்படத்தில் ரகுவரன் மற்றும் ஷாமிலி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அம்மா கதாபாத்திரத்தில் நடித்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.
தேவர்மகன்
பரதன் இயக்கத்தில் ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர்மகன். இப்படத்தில் கமலஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, வடிவேலு, எஸ் என் லட்சுமி, ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை இளையராஜா. பாதி படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேவதி அப்பாவி பெண்ணாக வந்து நடித்திருப்பார். படம் மிகபெரிய வெற்றி.
பிரியங்கா

நீலகண்டன் இயக்கத்தில் ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியங்கா. இப்படத்தில் கார்த்திக் மற்றும் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். இசை இளையராஜா. பிரபு சிறிது நேரம் வந்தாலும் படத்தை பரபரப்பாக அவர்தான் கொண்டு செல்வார். படமும் பெரிய வெற்றி.
என் ஆசை மச்சான்

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தின் ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் என் ஆசை மச்சான். இப்படத்தில் விஜயகாந்த், முரளி, ரஞ்சதா, ராதாரவி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். படமும் பெரிய வெற்றி.