வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரேமலுக்கு ப்ளூ சட்டை கொடுத்த விமர்சனம்.. குபீீருனு சிரிச்சிட்டேன், படத்துல மைனஸ் இது தான்

Premalu Movie : மலையாள படங்கள் இப்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான பிரேமலு படமும் வசூலை குவித்து வருகிறது. க்ரிஷ் ஏ டி இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் உருவான பிரேமலு படம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது.

அதோடு இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் இன்று தமிழ் மொழியிலும் இப்படம் வெளியான நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். எல்லா படத்தையும் கண்டபடி விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் பிரேமலுக்கும் நல்ல விமர்சனம் தான் கொடுத்திருக்கிறார்.

குபீருனு சிரித்த ப்ளூ சட்டை மாறன்

வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரை கதையின் மூலம் இயக்குனர் படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் நிறைய காட்சிகளில் குபீர் எனறு சிரிப்பு வந்தது. ராமன் சீதா, ஏடிஎம் கார்டு போன்ற சில காட்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகர் இருவரும் சரியான தேர்வு. படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது வாழ்ந்திருக்கிறார்கள். இந்த காதல் கலந்த நகைச்சுவை படம் இளைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி எல்லோருக்குமே கண்டிப்பாக பிடிக்கும் என்று ப்ளூ சட்டை கூறி இருக்கிறார்.

பிரேமலு படத்தில் மைனஸ்

இப்படத்தில் மைனஸ் என்றால் மூன்று மாநிலங்கள் காட்டப்படுகிறது. சேலம், கேரளா, ஹைதராபாத் என்று மூன்று இடங்கள் காட்டப்படுவதால் மொழியில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த படத்தை டப்பிங் செய்யும் போதும் அதில் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் மலையாளம் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் பிரேமலு படத்தில் ஹீரோயினை காதலிக்க ஹீரோவுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அதுவே ஹீரோவை காதலிக்க ஹீரோயினுக்கு ஒரு காரணம் கூட வலுவாக எதுவும் சொல்லவில்லை. மற்றபடி படத்தில் வேறு எந்த குறையும் இல்லை என்று ப்ளூ சட்டை மாறன் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

Trending News