மாரி செல்வராஜின் பைசன் எப்படி இருக்கு? முழு விமர்சனம்
Bison Movie Reveiw: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை வெளியான மாரி செல்வராஜின் “பைசன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. சமூக பிரச்சினைகளை ஆழமாக சொல்லும் இயக்குநராக தன்னை நிரூபித்த மாரி செல்வராஜ், இந்த முறை கபடி மைதானம் வழியாக அரசியலை பேச வந்திருக்கிறார்.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம், தென்மாவட்டத்தின் மண் மணத்தோடு கலந்த அரசியல் பின்னணியை கொண்ட கதை. எழில் அரசு ஒளிப்பதிவு, நிவாஸ் கே. பிரசன்னா இசை - தொழில்நுட்ப ரீதியிலும் வலுவான படைப்பு இது.
கபடி வீரனின் கனவு – அரசியலோடு கலந்த பயணம்
படத்தின் மையக் கதை ஒரு இளைஞனின் கனவு. சொந்த ஊரின் கபடி அணியிலே சேர்த்துக்கொள்ளப்படாத ஒரு இளைஞன், தனது முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இந்திய கபடி அணியில் இடம் பிடிக்கிறார் — அதுதான் “பைசன்”. ஆனால் அந்த பயணம் எளிதாக இருக்காது. சமூக தடை, சாதி அரசியல், வறுமை எல்லாம் அவனை சுற்றி நிற்கும்.
மாரி செல்வராஜ், இந்தப் போராட்டத்தை சாதாரண விளையாட்டாக அல்ல, ஒரு அடையாளத்திற்கான போராட்டமாக காட்டுகிறார். “வாழ்க்கைல ஜெயிக்கணும் என்றா மைதானத்துல மட்டும் இல்ல, மனசுக்குள்ளும் வெல்லணும்!” - என்று சொல்லும் வசனங்கள் ரசிகர்களை தாக்கி விடுகின்றன.
90களின் அரசியல் பின்னணி – நிஜ நிகழ்வுகளை கலந்த திரைக்கதை
பைசனின் கதை 1990களில் நடக்கிறது. அந்த காலத்தில் தென்மாவட்டங்களில் நடந்த சாதி கலவரங்கள் மற்றும் அதன் சமூக தாக்கங்கள் எல்லாம் கதையில் நுட்பமாக கலக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநர், மணத்தி கணேசன் வாழ்க்கை மற்றும் சில நிஜ கதாபாத்திரங்களை புனைவு சேர்த்து புதிய வடிவத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
வெங்கடேசன் பண்ணையார், பசுபதி பாண்டியன் போன்ற நிஜ மனிதர்களின் நிழல் படத்திலும் தெரிகிறது — ஆனால் பெயர்களும் பின்னணியும் மாற்றப்பட்டு. இந்த கலவையால் கதை ஒரு “Historical Realism” feel கொடுக்கிறது.
நடிகர்கள் – துருவ் விக்ரம் முதல் பசுபதி வரை சிறந்த நடிப்பு
துருவ் விக்ரம் இந்தப் படத்தில் தனது கேரியர் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். மணத்தி கணேசனாக அவர் நடித்த விதம், கபடி வீரனின் வலி, வறுமை, பெருமை எல்லாமே தெரிகிறது. அவரோடு பசுபதி – தந்தையாகவும், அமீர் – எதிர்க்கட்சித் தலைவராகவும், லால் – அரசியல் வல்லுநராகவும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உயிரோடு விளக்கியிருக்கிறார்கள்.
ரஜிஷா விஜயன் சகோதரியாகவும், அனுபமா பரமேஸ்வரன் காதலியாகவும் நடிக்கிறார்கள். அனுபமாவின் கதாபாத்திரம் சற்றே நீட்டிப்பாக இருந்தாலும், துருவ்-பசுபதி உணர்ச்சி காட்சிகள் தான் படத்தின் இதயம்.
தொழில்நுட்பம் – ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் எல்லாம் தரம்
எழில் அரசின் ஒளிப்பதிவு, தென் மாவட்டத்தின் மண் மணத்தையும், கபடி மைதானத்தின் தூசு, வியர்வை, வலியை உண்மையாக வெளிப்படுத்துகிறது. கலை இயக்கம் (Art Direction) 90களின் காலத்தை நம்பவைக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இசை பகுதியில் நிவாஸ் கே. பிரசன்னா முயற்சி நன்றாக இருந்தாலும், ரசிகர்கள் “சந்தோஷ் நாராயணன் - மாரி செல்வராஜ்” combo-வை மிஸ் பண்ணுறாங்க. அந்த raw energy இங்கே சற்றே குறைவு தான்.
அரசியல் கருத்துக்கள் – இரு பக்கங்களின் தவறுகளும் வெளிச்சமாய்
மாரி செல்வராஜ் தனது trademark dialogue writing-ஐ இங்கும் காட்டியிருக்கிறார். “அடையாளத்துக்காக சண்டையிடுறோம்… ஆனா அடையாளம் தான் நம்மை பிரிக்குது!” என்ற வசனம் படத்தின் மையக் கருத்தை வெளிப்படுத்துகிறது.
இயக்குநர் இரண்டு தரப்பினரின் தவறுகளையும் வெளிக்கொண்டு வருகிறார். அது ஒரு பக்கம் bias இல்லாத பார்வையை கொடுக்கிறது. அந்த sincerity தான் “பைசன்” படத்தை அரசியல் சினிமாவாக உயர்த்துகிறது.
பலவீனங்கள் – வேகக்குறைவு, நீளமான காட்சிகள்
படத்தின் வேகம் தான் முக்கிய பிரச்சனை. முதல் பாதி நிதானமா நகரும் கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுத்தடிக்கிறது. சில காட்சிகள் மாரி செல்வராஜின் முந்தைய படங்களின் feel-ஐ கொடுக்குது. அதேபோல் அனுபமா பரமேஸ்வரனின் கதாபாத்திரம் unnecessary-ஆனதாக உணரப்படுகிறது.
இருப்பினும், துருவின் performance அந்த குறைகளை சில அளவுக்கு மறைக்கிறது. படத்தின் runtime குறைந்திருந்தால் impact இன்னும் அதிகமா இருந்திருக்கும்.
மொத்தத்தில் – ஒரு கலந்த அரசியல் சினிமா அனுபவம்
பைசன் ஒரு பரியேரும் பெருமாள் அல்லது கர்ணன் அளவுக்கு தாக்கம் செய்யவில்லை என்றாலும், அது சொல்ல வருகிற message முக்கியமானது. “கபடி” விளையாட்டு ஒரு metaphor — மைதானத்துல சண்டையா இல்ல, அடையாளத்துக்கான போராட்டத்துக்கான கதை இது.
மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு சமூக-அரசியல் சினிமா அனுபவத்தை கொடுத்திருக்கிறார். சில குறைகள் இருந்தாலும், பைசன் படம் நிதானமாக பேசும் ஒரு காள மாடன்!
Rating: 3.5/5
