1. Home
  2. விமர்சனங்கள்

பிரதீப்-க்கு வெற்றி தொடருமா? DUDE பட முழு விமர்சனம்

பிரதீப்-க்கு வெற்றி தொடருமா? DUDE பட முழு விமர்சனம்

DUDE Movie Review : “லவ் டுடே”, “டிராகன்” வெற்றிக்கு பிறகு, நடிகர் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் திரைக்கு வந்துள்ளார் - இந்த முறை “DUDE” என்ற பெயரில், ஒரு முழு பண்டிகை ரிலீஸாக வந்து கலக்கியுள்ளார்.

கீர்த்திச்வரன் இயக்கத்தில், காதல், நகைச்சுவை, சமூகப் பின்னணி ஆகியவற்றை ஒரே கமெர்ஷியல் கதையில் கலந்து சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனா அதில் சில சிரிப்புகளும் க்யூட் மொமென்ட்ஸும் இருந்தாலும், முழுக்க ஒரே டோனில் சீராக செல்ல முடியாமல் தடுமாறுகிறது.

கதை – காதல், கனவு, சமூக எதிர்பார்ப்பு

“Dude” கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது - அவனுடைய காதல், தனிப்பட்ட இலக்கு, சமுதாயத்தின் பார்வை ஆகியவற்றுக்கிடையே நடக்கும் சண்டைதான் இதன் மையம். கதையின் ஆரம்பம் சிறிய குளறுபடிகளோடு ஆரம்பிக்கிறது. காட்சிகள் ஒன்றோடொன்று connect ஆகாம, tonal mismatch இருக்கும் மாதிரி தோன்றுகிறது.

ஆனா pre-interval stretchல சில நல்ல நகைச்சுவை காட்சிகள் கதையை மீட்டுக் கொள்கிறது. முதல் பாதி தான் படத்தின் most enjoyable portion - பிரதீப் ரங்கநாதனின் timing, energy, body language எல்லாம் அதில்தான் ஜொலிக்கிறது.

இரண்டாம் பாதி – predictable writing, depth குறைவு

இரண்டாம் பாதி வந்தவுடனே, கதை formula-க்கு மாறி விடுகிறது. முதல் பாதியில் இருந்த freshness சுருங்கி, screenplay ரொம்ப predictable ஆகி விடுகிறது. சமீப கால தமிழ் படங்களில் போல, இங்கும் caste-based message ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. ஆனா அது storyக்கு naturally blend ஆகாம, மேலோட்டமானது போல தோன்றுகிறது.

எமோஷனல் டேப்த் இல்லை - சில காட்சிகள் genuine feel தரலாம், ஆனா அந்த connection நீடிக்காது. இதே director “Love Today” ல சொல்லிய உண்மை உணர்வுகள் இங்க இல்ல. ஒரு “fun rom-com” இருக்கணும்னா இருந்தது, “serious message drama” பக்கம் திடீர்னு போயிருச்சு.

நடிகர்கள் & தொழில்நுட்பம் – performance save பண்ணுது பிரதீப் ரங்கநாதன் இந்த வகை கதைகளில் தான் கம்ஃபர்டா இருப்பார். அவரோட comic timing, dialogue delivery எல்லாம் energetic. அவரோட chemistry மமிதா பைஜு உடன் ரொம்ப pleasant ஆனது, ஆனா அந்த காதல் கதைக்கு உணர்ச்சி ஆழம் இல்ல.

சரத்குமார் neatly written supporting role-ல solid performance தந்திருக்கிறார். ஹிரிது ஹரூன் தன்னுடைய சிறிய portionல நல்ல impression விட்டுள்ளார். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் - இது அவரின் Kollywood debut - soundtrack catchy, fresh, modern feel உடன் இருக்கு.

தொழில்நுட்பம் – நிறம், வேகம் இரண்டிலும் சமமில்லாத அனுபவம்

நிகேத் பொம்மி அவர்களின் ஒளிப்பதிவு, ஒரு ரொமான்ஸ் காமெடி படம் எப்படி colorful-ஆ இருக்கணுமோ அப்படி light-ஆ காட்டுகிறது. ஆனா பாரத் விக்ரமன் அவர்களின் எடிட்டிங், குறிப்பாக இரண்டாம் பாதியில், சற்று பலவீனமாக இருக்கிறது. சில transitions திடீர்னு கட் பண்ணப்பட்ட மாதிரி feel வரும்.

பின்புல இசை (BGM) சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது, ஆனா emotional moments-ஐ உயர்த்துவதில் அது பெரிதாக பங்களிக்கவில்லை. இந்த inconsistency தான் “Dude” படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பலம் – சிரிப்பு & charm, பலவீனம் – Consistency

“டூட்” ஒரு லைட் ஹார்ட்டட் ரொமான்டிக் காமெடி தான். சில சிரிப்புகள், சில charm moments உண்டு - குறிப்பாக பிரதீப்பின் expressions, மமிதாவின் innocence. ஆனா படம் ஒரே வேகத்திலும், ஒரே டோனிலும் போகவில்லை. ஒரு நிமிடம் audience சிரிக்க வைக்குது, அடுத்த நிமிடம் unnecessary drama சேர்க்குது. அந்த balance தான் director கை விடும் இடம்.

மொத்தத்தில் - watchable but not memorable

மொத்தத்தில் “Dude” ஒரு watchable rom-com.பிரதீப் ரங்கநாதனின் presence காரணமாக சில காட்சிகள் உயிரோடு தெரிகிறது, ஆனா கதை மற்றும் screenplay-யின் inconsistency, படத்தின் strength-ஐ குறைக்கிறது. சில catchy songs, colorful visuals, casual humour - இவை ரசிகர்களை ஒரு extent வரை entertain பண்ணும். ஆனா அந்த “feel-good” connect கிட்டாது.

தீர்மானம்

“Dude” - சில சிரிப்புகள், சில சுவாரஸ்யமான மொமென்ட்ஸ், ஆனா consistent impact இல்ல. ஒரு சீரான ரொமான்டிக் காமெடி எதிர்பார்த்தவர்களுக்கு சற்று mixed feeling தரும். பிரதீப் ரங்கநாதனின் performance தான் biggest plus, ஆனா படம் முழுமையாக அந்த potential-ஐ பயன்படுத்தவில்லை. சுருக்கமா சொன்னா - “Dude, நன்றா இருக்கு... ஆனா Deep-ஆ இல்லை!”

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.