1. Home
  2. விமர்சனங்கள்

தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவம்.. ஃபயர் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவம்.. ஃபயர் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Fire Movie Review: ஜேஎஸ்கே இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், ரட்சிதா, சாக்ஷி அகர்வால், சாந்தினி, காயத்ரி ஷான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஃபயர் இன்று வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவம் தான் இந்த படத்தின் கதை. காசி என்ற டாக்டர் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அந்த கதாபாத்திரத்தில் தான் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். ட்ரைலரிலேயே பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

ஃபயர் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

பிசியோதெரபி டாக்டராக இருக்கும் பாலாஜியை காணும் என அவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு செல்கின்றனர். அமைச்சரும் இந்த கேசை முடுக்கி விட இன்ஸ்பெக்டர் விசாரணையில் இறங்குகிறார்.

அந்த விசாரணை நான்கு பெண்களின் பக்கம் திரும்புகிறது. பாலாஜி அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்துவிட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்திருக்கிறார்.

இந்த உண்மை தெரிய வந்த நிலையில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது குற்றவாளியை போலீஸ் கண்டுபிடித்ததா போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.

தற்போது நம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் அட்டூழியர்களின் பிம்பம் தான் இந்த கதை. உண்மை சம்பவமாக இருந்தாலும் படத்திற்காக பல விஷயங்களை சேர்த்துள்ளார் இயக்குனர்.

அந்த ஹீரோ கேரக்டருக்கு பொருந்தி இருக்கிறார் பாலாஜி முருகதாஸ். மனுஷன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

சமூகத்திற்கான மெசேஜ் என்பதை தாண்டி படத்தில் பெரிய பிளஸ் எதுவும் இல்லை. ஆனால் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் பெரும் பலவீனமாக உள்ளது.

அதனால் இதை குடும்பத்தோடு பார்ப்பது கஷ்டம். அதே போல் பாடல் சண்டை காட்சிகள் எதுவுமே ஒட்டவில்லை. அதனால் இப்படம் தியேட்டரில் கவனம் பெறுவது கேள்விக்குறி தான். ஆக மொத்தம் ஃபயர் - அனல் குறைவு

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.