Kolai Movie Review- ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் விஜய் ஆண்டனி.. கொலை எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Kolai Movie Review: ஹாலிவுட்டில் பணிபுரிந்த பாலாஜி குமார் பல வருடங்களுக்கு முன்பு விடியும் முன் என்ற திரில்லர் படத்தை கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் அவர் இயக்கத்தில் கொலை படம் வெளியாகி இருக்கிறது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.

ஏற்கனவே இரண்டு ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருந்த நிலையில் தற்போது படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் மேக்கிங் படு மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னுடைய பாணியில் கதையோடு பயணிப்பது தான் இப்படத்தின் முக்கிய அம்சம்.

அந்த வகையில் ஒரு கொலையை ஹீரோ எப்படி தன்னுடைய பாணியில் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. கதைப்படி மாடலான மீனாட்சி சவுத்ரி மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரியான ரித்திகா சிங் விசாரிக்கிறார். அவருக்கு துணையாக வருபவர் தான் ஓய்வு பெற்ற அதிகாரியான விஜய் ஆண்டனி.

ஒரு கேசை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு பார்க்கும் இவர் இந்த கொலையை எப்படி கண்டறிந்தார், குற்றவாளிகளை கண்டுபிடித்தார, இல்லையா என்பது தான் இந்த கொலை படத்தின் கதை. அந்த வகையில் கேமரா கோணம், விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை என படத்தின் ஒவ்வொரு விஷயங்களும் நம்மை ஈர்க்கிறது.

இந்த அற்புதமான டெக்னிக்கல் விஷயங்கள் தான் கதைக்குள் நம்மை ஈர்த்து விடுகிறது. அதிலும் விஜய் ஆண்டனி துப்பறியும் விதம் சஸ்பென்சாக நகர்வது சிறப்பு. ஆனால் நடுத்தர வயதுடையவராக அவரை காண்பித்து விட்டு ஹேர் ஸ்டைலில் மட்டும் வித்தியாசத்தை இயக்குனர் கொண்டு வந்திருக்கிறார். மற்றபடி அவருடைய உடல் மொழியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என தோன்றுகிறது.

அது மட்டுமல்லாமல் படத்திற்கு படம் நடிப்பில் கொஞ்சம் வித்தியாசம் காட்டினால் நன்றாக இருக்கும். இவரை அடுத்து ரித்திகா சிங் ஒரு போலீஸ் அதிகாரியாக தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மாடலாக வரும் மீனாட்சி சவுத்ரியும் கவனம் இருக்கிறார். இப்படி சில நிறைகள் இருந்தாலும் பல விஷயங்கள் நம் மனதை தொட தவறிவிட்டது. அந்த வகையில் இப்படத்தை அதன் மேக்கிங்குக்காக ஒரு முறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5