1. Home
  2. விமர்சனங்கள்

விமலின் பரமசிவன் பாத்திமா.? முழு விமர்சனம்

விமலின் பரமசிவன் பாத்திமா.? முழு விமர்சனம்

Paramasivan Fatima Movie Review : இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி, எம் எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் ஆகியோர் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது பரமசிவன் பாத்திமா. டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது என்று எல்லோருக்கும் எண்ணம் தோன்றும்.

அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் மதத்தால் மூன்று பிரிவினை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் அவ்வப்போது சண்டைகள் நேர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் விமல் மற்றும் சாயாதேவி இருவரும் இரு இளைஞர்களை கொலை செய்து விடுகின்றனர். அதோடு மேலும் சில கொலைகள் செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த கொலை வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் வருகிறார்.

பரமசிவன் பாத்திமா முழு விமர்சனம்

யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியில் கொலைக்கான காரணம் என்ன, அவர்களுக்கும் விமல் மற்றும் சாயா தேவிக்கு என்ன பகை என்பது தான் படத்தின் மீதி கதை. சாதாரண மத பிரச்சனை ஹாரர் படம் போல எடுக்க நினைத்த இயக்குனர் சொதப்பி இருக்கிறார்.

படம் முழுவதும் பனிமூட்டமாக இருப்பது போல் காட்டுவதால் பெரிய அளவில் ஒளிப்பதிவும் சரியாக அமையவில்லை. மேலும் கதாபாத்திரங்கள் அதிகம் பேசிக்கொண்டே இருப்பதால் வசனங்கள் தான் இடம்பெறுகிறது. இதனாலேயே ரசிகர்களுக்கு அலுப்பு தட்டிவிடுகிறது.

விமலின் நடிப்பிற்கு வேண்டுமானால் ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம். மற்றபடி இயக்குனர் பெரிதாக படத்தில் எதுவும் சொல்லவில்லை. டைட்டில் தான் வித்யாசமே தவிர படத்தில் ஒன்றும் இல்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2/5

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.