வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இருண்டு போன 4 பெண்களின் புரட்சி போராட்டம்.. வன்மத்தை எரிக்கப் போகும் கண்ணகி ட்ரெய்லர்

Kannaki Movie Trailer: தற்போதைய சினிமாவில் புதுப்புது இயக்குனர்கள் நல்ல கதைகளுடன் பயணத்தை தொடங்கி வருகிறார்கள். அந்த வகையில் அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப் மற்றும் ஷாலினி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கண்ணகி. இப்படத்தை ஸ்கைமூன் என்டர்டைன்மென்ட் மற்றும் இஎஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஷான் ரகுமான் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதாவது வெவ்வேறு சூழ்நிலையில் இருக்கும் நான்கு பெண்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அம்மு அபிராமியை பலமுறை பெண் பார்க்கும் நிகழ்ச்சி அடிக்கடி நடைபெறுவதால் விரக்தி அடைகிறார்.

அத்துடன் வருகிற மாப்பிள்ளைகள் பெண்ணை பார்த்து எதுவும் சொல்லாமல் தட்டிக் கழிப்பது, அதனால் திருமணம் கைகூடாமல் இருக்கும் வேதனையை எதார்த்தத்துடன் நடித்துக் காட்டி இருப்பார். கடைசியில் நான் வேணும்னா அப்படியே வந்து நின்னுடுறேன் அப்பா, ஒரு நாலஞ்சு பேரா வரிசையாக வந்து பார்த்துட்டு போக சொல்லுங்க என்று சொல்லும் வேதனைக்குரிய வார்த்தைகள் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குகிறது.

Also read: ஹனிமூன் மூட்டில் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி பாண்டியன்.. செம க்யூட்டான புகைப்படம்

அடுத்ததாக திருமண உறவின் மீது நம்பிக்கை இல்லாமல் லிவ்விங்டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க நினைக்கிறார் ஷாலினி. அடுத்து பல ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டு திருமண பந்தத்தில் இணைந்த வித்யா பிரதீப்புக்கு திருமணத்தில் நடந்த ஏமாற்றம். அதன்பின் கணவனின் வற்புறுத்தலால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து தவிக்கும் வித்தியா பிரதீப்.

அடுத்ததாக வயிற்றில் இருக்கும் குழந்தையை கருவிலேயே கலைக்க நினைக்கும் கீர்த்தி பாண்டியன். ஆனால் அது நடக்காமல் போனதால் ஏற்படும் பிரச்சனை. இப்படி இந்த நான்கு பெண்களுக்கு வரக்கூடிய வேதனைகளையும், கண்ணீர்களையும் எதார்த்தமான நடிப்புடன் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இருண்டு போய் கிடக்கும் வாழ்க்கையை மீட்டெடுக்கும் விதமாக புரட்சி போராட்டம் தான் கண்ணகி. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீசாக இருக்கிறது.

Also read: பண மோசடியில் சிக்கிய அசுரன் பட அம்மு அபிராமி.. இப்படி எல்லாமா பிராடு பண்ணுவாங்க!

Trending News