புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மலை ஏறினாலும் மச்சான் தயவு வேண்டும்.. அஜித்தால் நொந்து போன ரிச்சர்ட்

Actor Ajith: மலை ஏற போனாலும் மச்சான் தயவு வேணும்னு சொல்வாங்க. ஆனா அஜித்தால் அவருடைய மச்சான் இப்போது நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறாராம். ஷாலினியின் அண்ணனான ரிச்சர்ட், தங்கை ஷாமிலி ஆகியோர் குழந்தையிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

அதில் ரிச்சர்ட் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவர் நடிக்கும் படங்களில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் எந்த வெற்றியையும் இவர் பார்த்தது கிடையாது.

Also read: 90% வெற்றி மற்றும் வெள்ளி விழா கொடுத்த இயக்குனர்.. 4 படங்களில் கேள்விக்குறியான அஜித் இயக்குனர்

இருப்பினும் அவர் ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்துடன் இணைந்து நடித்திருந்தாலே இவர் எப்போதோ முன்னணி இடத்தை தக்க வைத்திருப்பார் என்ற கேள்விகள் பலருக்கும் தோன்றலாம். ஆனால் அஜித்தை பொருத்தவரை குடும்பம் வேறு சினிமா வேறு.

என்னதான் மனைவியின் அண்ணனாக இருந்தாலும் அவர்தான் தனக்கான இடத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் அவர் இருக்கிறார். அதன் காரணமாகவே அவர் சில விஷயங்களை கண்டும் காணாமலும் இருந்து வருகிறாராம். அதாவது ரிச்சர்ட் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்தினர் மூலமாகவும் ஷாலினி மூலமாகவும் அஜித்துடன் நடிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also read: விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

ஆனால் அவர் அதை கண்டும் காணாமல் இருந்து வருகிறார். இத்தனைக்கும் அருண் விஜய் போன்ற நடிகர்கள் இவர் படத்தில் நடித்து தான் அடுத்த கட்டத்திற்கு சென்றார்கள். அப்படி இருக்கும் போது சொந்த மச்சானை அவர் கை தூக்கி விடாமல் இருப்பது ஏன் என்ற விமர்சனமும் எழத்தான் செய்கிறது.

ஆனால் அஜித் திறமை இருந்தால் வாய்ப்பு தானாக தேடி வரும் என்ற ரீதியில் மச்சானை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதனால் வெறுப்படைந்த ரிச்சர்ட்டுக்கு முன்னேறவே முடியாதோ என்ற ஒரு பயம் இருந்தாலும், தனக்கான இடத்தை பிடிக்கவும் முயற்சி செய்து வருகிறார்.

Also read: ஷாமிலியின் ஓவிய கண்காட்சியில் மெழுகு சிலை போல் இருக்கும் அஜித்தின் மகள்.. ஷாலினியை ஓரம் கட்டும் அழகு

Trending News