புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குண்டாக மாறிய ரித்திகா சிங் புகைப்படம்.. குத்து சண்டை எல்லாம் இப்ப போடறது இல்ல போல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் ரித்திகா சிங். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அசோக் செல்வன் உடன் ஜோடியாக நடித்தார். நண்பர்களாக பழகும் இவர்கள் அதன் பிறகு கணவன் மனைவியாக எப்படி வாழ்கிறார்கள் எப்படி அவர்களை புரிந்து கொள்கிறார்கள் என்பதே மையமாக கொண்டு உருவான இப்படம் காதலர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

இவரது முதல் படம் குத்து சண்டை மூலம் ஆரம்பித்தாலும் அடுத்த காதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். தற்போது அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்ஸர், வணங்காமுடி மற்றும் பிச்சைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ritika singh
ritika singh

தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ரித்திகா சிங் நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இப்படத்தில் இவர் என்ன மாதிரியான கதாபாத்திரம் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

ritika singh
ritika singh

தற்போது இவர் அவரை சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரித்திகா சிங் இவ்வளவு குண்டாக உள்ளாரா என ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

Trending News