வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரியா.. இதுவரை வாங்கிய சம்பளம்

Bigg Boss : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்று ஆக வந்தவர்தான் ரியா தியாகராஜன். சமீபத்தில் ஆறு பேர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நிலையில் இவரும் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்ற கனவுடன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக முதல் வாரமே அவர் எலிமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த சூழலில் பிக் பாஸ் வீட்டில் இதுவரை ரியா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த ஆறு பேரில் மஞ்சரி மற்றும் ரியா ஆகியோருக்கு பத்தாயிரம் ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ராயன் 15000 சம்பளம் வாங்கிய நிலையில் சிவக்குமார், வர்ஷினி, ரானவ் ஆகியோர் தலா ஒரு நாளைக்கு 12,000 சம்பளம் வாங்கி வந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் ரியா வாங்கிய சம்பளம்

இந்நிலையில் ரியா இதுவரை பிக் பாஸ் வீட்டில் 14 நாட்கள் பயணித்திருக்கிறார். அதன்படி இதுவரை அவர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சம்பளம் வாங்கி உள்ளார். ரியாவின் சம்பளம் இவ்வளவு குறைவா என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கிறது.

மேலும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக டல் அடிக்க தொடங்கிவிட்டது. போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் கவனம் ஈர்க்கும்படியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

இப்போது பிக் பாஸ் வீட்டில் 19 போட்டியாளர்கள் உள்ளனர். அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இனி போட்டிகள் கடுமையாக்க பட்டால் பிக் பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பிக்கும். இந்த வாரம் யார் நாமினேஷனில் சிக்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News