வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக் பாஸ் எலிமினேஷனை ஏற்றுக் கொள்ள முடியாத ரியா.. சோசியல் மீடியாவில் கண்ணீர் விட்டு பேசிய பரிதாபம்

Vijay Tv Bigg Boss 8 Tamil Riya Eliminated: திறமையும் நம்பிக்கையும் மட்டும் இருந்தால் போதாது, அதனுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. ஏனென்றால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப, யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார். யார் சீக்கிரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு சில மர்மமான விஷயங்கள் நடைபெற்று வருகிறது.

அப்படித்தான் இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி ரியா வெளியே போகிறார். அதாவது இதற்கு முன்னதாக எலிமினேட் ஆகிப்போன சுனிதா, ரவீந்தர், தர்ஷா குப்தா இவர்களைவிட அந்த வீட்டில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு எதுவும் பண்ணாமல் உப்புக்கு சப்பாணியாக தான் சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அப்படி இவர்கள் இருக்கும் பட்சத்தில் விளையாட்டை ஸ்ட்ராங்கா விளையாடி கொண்டு வந்த சுனிதா, ரவிந்தர், தர்ஷா, போனது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு தான் இருந்தது.

அதே மாதிரி தான் ரியாவின் எலிமினேட்டும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஏன் இதை ரியாகூட எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் நாம் எலிமினேட் என்று சொன்னதும் அதிர்ச்சியாகி என்ன சொல்வது என்று தெரியாமல் உணர்ச்சிபூர்வமாக கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார். ஆனாலும் மேடைக்கு வந்த பிறகு உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் பாசிட்டிவாக பேசி விஜய் சேதுபதி இடம் என்னால் நம்ப முடியவில்லை என்பதற்கு ஏற்ப அவருடைய கருத்துக்களை முன் வைத்தார்.

அதாவது நான் ஏதாவது பண்ணி மக்களிடம் ஒரு பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் முயற்சி எடுத்தேன். நான் எந்த இடத்திலும் சும்மாவே இல்லை, அப்படி இருக்கும்பொழுது நான் எப்படி எலிமினேட் ஆனேன் என்பது என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்று விஜய் சேதுபதியிடம் அழுதார். இதை கேட்ட விஜய் சேதுபதியும் நீங்கள் நல்ல தான் விளையாடினார்கள். நிச்சயம் உங்களுடைய வெற்றி நான் கண்கொண்டு பார்ப்பேன்.

அடுத்த தருணத்தில் உங்களை சந்திக்கும் போது நீங்கள் ஒரு நல்ல இடத்தில் இருப்பீங்க என்று வாழ்த்தி வெளியே அனுப்பி வைத்தார். அப்படி ரியா போன பிறகும் விஜய் சேதுபதி கூறியது என்னவென்றால் என்னாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொன்னார். இதனை அடுத்து ரியா இப்பொழுது வீடியோ மூலம் ஒன்று பேசி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்.

riya bigg boss
riya bigg boss

அதில் ரியா கூறியது என்னால் முடிந்தவரை நான் பிக் பாஸ் வீட்டுக்குள் செய்து தான் வந்தேன். எந்த இடத்திலும் நான் சும்மா இல்லை, அப்படி இருக்கும் பொழுது மக்கள் எப்படி என்னை வெளியே அனுப்பினார்கள் என்பதற்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. ஒருவேளை பெரும் புகழும் எதுவும் இல்லை என்பதால் எனக்கு இந்த மாதிரி ஒரு ஏமாற்றம் கிடைத்திருக்கிறதா? என்பதும் புரியவில்லை என்று எமோஷனலாக கண்ணீர் விட்டு பரிதாபத்துடன் பேசி அனுப்பி இருக்கிறார்.

ஒரு பக்கம் ரியாவுக்கு சப்போர்ட் பண்ணி ஆதரவு தெரிவித்து இருந்தாலும் இன்னொரு பக்கம் கூறுவது என்னவென்றால், ரியாவின் அடாவடித்தனமான பேச்சு, ஓவர் ஆட்டிட்யூட் காட்டியதால் தான் ரியாவுக்கு இந்த தண்டனை என்பதற்கு ஏற்ப சில கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாரம் வாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேறுவது சகஜம் தான். அந்த வகையில் இந்த எலிமினேஷனையும் ரியா ஏற்றுக் கொண்டு அடுத்த வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.

Trending News