வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜயின் ஆசையை நிறைவேற்றாத ஆர்.ஜே. பாலாஜி.. மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய்

நடிகர் விஜய் நடிக்க வந்து 30 ஆண்டுகளில் பல இயக்குனர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சில சமயங்களில் ஒரே இயக்குனர்களுடன் கூட்டணியில் இணைந்து தொடர் படங்களில் நடித்துள்ளார். பல புதுமுக இயக்குனர்கள் அல்லது ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய இயக்குநர்களுடனும் விஜய் கமிட்டாகி நடித்துள்ளார்.

என்னதான் விஜயிடம் இயக்குனர்கள் கதை கூறினாலும் விஜய் கதையில் சில மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட அனைத்தும் நடக்கும், அதையும் ஏற்று இயக்குனர்கள் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததே பெரும்பாக்கியம் என நினைத்து விஜய் சொல்லும் விஷயங்களில் கேட்டு படம் எடுப்பர். மேலும் விஜய் சார் எப்போது நம்மை அழைத்து கதை கேட்பார் என்ற எதிர்பார்ப்பில் எத்தனையோ இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர்.

Also Read: கிளி ஜோசியம் பார்த்து படத்தை ஓட வைக்கும் RJ பாலாஜி.. ஒரே நாள்ல தியேட்டர் விட்டு ஓடாம இருந்தா சரி

அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனரான ஆர்.ஜே பாலாஜி, விஜயிடம் கதைக்குரிய நிலையில் விஜயின் ஆசையை நிராகரித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி தற்போது ரன் பேபி ரன் படத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஆர்.ஜே பாலாஜி ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவரிடம் விஜயின் நடிப்பில் எப்போது படம் எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.ஜே பாலாஜி, நான் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் விஜய் சாரை சந்தித்து கதை கூறினேன். நான் சொன்ன கதை விஜய் சாருக்கு பிடித்து போக, இந்தாண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கலாம் என தெரிவித்தார்.

Also Read: பிரஸ் மீட்டில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட RJ பாலாஜி.. நீங்க வேற லெவல் ப்ரோ

அதைக் கேட்டவுடன் தனக்கு ஷாக்கானது என தெரிவித்த ஆர்.ஜே பாலாஜி, தனக்கு இன்னும் ஒரு வருடமாவது உங்களை வைத்து படம் பண்ண டைம் தேவை, உடனே என்றால் என்னால் முடியாது என விஜயிடம் கூறி ஆர்.ஜே பாலாஜி டைம் கேட்டு நிராகரித்துள்ளாராம். இதற்கு பதில் கூறிய விஜய், நான் உங்களது மூக்குத்தி அம்மன் பட பாணியில் குடும்பங்களை கவரும் வகையிலும், காமெடி கலந்த கமர்ஷியல் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.

ஆனால் நீங்கள் டைம் கேட்கிறீர்கள், சரி நீங்கள் தயாராகி விட்டு எப்போது வேண்டுமானாலும் இதே கதையோ, வேறொரு கதையோ கூறுங்கள் என்று மீண்டும் ஆர்.ஜே பாலாஜிக்கு வாய்ப்பு கொடுத்து விஜய் அனுப்பி வைத்துள்ளாராம். விஜயின் இந்த செயலை கண்டு ஆர்.ஜே.பாலாஜி அசந்து போனதாக தெரிவித்தார். மேலும் விஜயின் நடிப்பில் நான் கட்டாயம் படம் இயக்குவேன் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also Read: விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீசுக்கு முன்பே கல்லா கட்ட தொடங்கிய தளபதி 67.. லோகேஷ் மேல் அவ்ளோ நம்பிக்கை

Trending News