புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட இயக்குனர்.. கால்ஷீட் கொடுத்து லாக் செய்த ஆர்ஜே பாலாஜி

Sivakarthikeyan, RJ Balaji: சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பல இயக்குனர்களிடம் இவர் வாய்ப்பு தேடி சென்ற நிலையில் இப்போது இவருடைய வாய்ப்பு கிடைக்காதா என பல இயக்குனர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயனால் ஒரு இயக்குனர் கைவிடப்பட்டார்.

இப்போது அவருக்கு தோல் கொடுத்து தூக்கி விட ஆர்ஜே பாலாஜி முன்வந்துள்ளார். தனக்கே உண்டான ஸ்டைலில் காமெடி படங்களை இயக்கி, நடித்து தனக்கான ரசிகர்களை ஆர்.ஜே பாலாஜி பெற்றிருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also Read : சிவகார்த்திகேயன் போல் வளர வேண்டிய நடிகர்.. கேடு கெட்ட பழக்கத்தினால் இடம் தெரியாமல் போன பரிதாபம்

இந்நிலையில் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அசோக்குமார். ஆரம்பம் முதலே அட்லீயுடன் நிறைய படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் சிங்கப் பாதை படத்தை இவர்தான் இயக்குவதாக இருந்தது. மேலும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்க டி இமான் இசையமைத்தாக கூறப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் அப்பா, மகன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களினால் இந்த படம் பாதியிலேயே தடைபட்டு நின்று போனது. அதன்பின்பு அசோக் செல்வன் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

Also Read : 3 வருட கேப், தளபதி இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் போட்ட பலே திட்டம்.. அதிரடியாக தொடங்கப்பட்ட SK21

இந்த சூழலில் ஆர் ஜே பாலாஜி அசோக் குமார் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். ஆகையால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகுவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. மேலும் இந்த படத்தில் மற்ற பிரபலங்களின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த சிங்கப்பாதை கதையில்தான் இப்போது ஆர்ஜே பாலாஜி நடிக்கிறாரா என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. அல்லது முழுக்க முழுக்க ஆர்ஜே பாலாஜிக்கு உண்டான ஸ்டைலில் நகைச்சுவையாக ஒரு கதையை அசோக்செல்வன் எடுக்க உள்ளாரா என்பது விரைவில் தெரியவரும்.

Also Read : சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

Trending News