சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

போனி கபூரை விட வசூலை அள்ள துடிக்கும் RJ பாலாஜி.. அடுத்த பட விளம்பரத்திற்காக புது யுக்தி!

வெள்ளி திரையைக் காட்டிலும் சின்னத்திரை பிரபலங்கள் வெகு சீக்கிரமாகவே ரசிகர்களையும் மனதைக் கவர்ந்து விடுகின்றனர். ஏனென்றால் அனுதினமும் அவர்களை தவறாமல் சீரியலில் பார்ப்பதால் மக்கள் மத்தியில் அவர்கள் ஈசியாக ரீச் ஆகின்றனர். ஆகையால் தொலைக்காட்சிகளின் பவரை புரிந்து கொண்ட, ஆர்கே பாலாஜி தன்னுடைய படத்தின் புரமோஷனுக்காக பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வித்தியாசமான யுத்தியை கையாண்டுள்ளார்.

பொதுவாக ஒரு படத்தை புரமோஷன் செய்ய பேட்டி அளிப்பது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது என்பது போன்ற விஷயத்தையே பல வருடங்களாக படக்குழுவினர் பின்பற்றி வருகின்றனர். அதை தற்போது ஆர்கே பாலாஜி மாற்றி யோசித்து செயல்பட்டுள்ளார்.

ஆர்கே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி நடிப்பில் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்திற்காக படக்குழுவினர், ஜீ தமிழில் தேவயானி நடிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபல சீரியஸான புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படம் ஏற்கனவே ஹிந்தியில் போனி கபூர் தயாரிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ‘பதாய் ஹோ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதால் ஆர்கே பாலாஜி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தை வைத்து போனி கபூரை விட வசூலை வாரி குவிக்க வீட்ல விசேஷம் பட புரமோஷனுக்காக வித்தியாசமாக யோசித்து சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

350 எபிசோடை கடந்து சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த புது புது அர்த்தங்கள் சீரியலில் ஆர்கே பாலாஜி தன்னுடைய படத்தின் புரமோஷனுக்காக நடித்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மக்களிடம் இந்தப்படத்தை கொண்டுபோய் சேர்க்க முடியும் என நம்புகிறார். இவருடைய இந்த புது முயற்சி கோலிவுட்டிற்கு மட்டுமல்ல சின்னத்திரை ரசிகர்களுக்கும் புதுமையாக இருப்பதால் ஆர்கே பாலாஜியின் இந்த அணுகுமுறை பலரால் பாராட்டப்படுகிறது.

வீட்ல விசேஷம் படத்தின் டிரைலரை வைத்து பார்த்தால் மகனுக்கு கல்யாணம் ஆகும் வயதில் தாய்-தந்தை கர்ப்பமாக இருப்பது போல் படத்தை உருவாக்கி, அதன் மூலம் நகைச்சுவையையும் மட்டுமல்லாமல் சமுதாயத்தால் எதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்தப் படத்தில் காட்டி இருப்பது தெரிகிறது.

Trending News